பழநி மலைக் கோயிலில் மீண்டும் தங்கரத புறப்பாடு: பக்தர்கள் மகிழ்ச்சி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பழநி மலைக் கோயிலில் மீண்டும் தங்கரத புறப்பாடு: பக்தர்கள் மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:01

பழநி:பழநி மலைக்கோயிலில் கொரோனா பரவலை தடுக்க 2021 ஏப்ரல் முதல் பக்தர்களை தங்கத் தொட்டில் தங்கரத புறப்பாடு நேர்த்திக்கடன் செலுத்தவும் கால பூஜைகளில் சுவாமி தரிசனம் செய்யவும் அரசு அனுமதி வழங்கவில்லை. நேற்று முதல் (அக்.23-) இவற்றில் பக்தர்கள் பங்கேற்க மலைக்கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.



பழநி மலைக்கோயிலில் நேற்று காலை தங்கத் தொட்டில் இரவு 7:00 மணிக்கு வெளிப்பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒன்றரை ஆண்டுக்குப்பின் பங்கேற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பங்கேற்பு கட்டணம் தங்கத் தொட்டிலில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை படுக்கவைத்து நேர்த்திக் கடன் செலுத்தலாம். இதற்கு கட்டணம் ரூ.300.



தங்கரத புறப்பாட்டில் 3 பேர் கலந்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ரூ. 2000 செலுத்த வேண்டும். காலை 6:00 முதல் மாலை 5:00 மணி வரை நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும். தங்க தொட்டிலில் பங்கேற்போருக்கு பஞ்சாமிர்த பிரசாதமும் தங்கரத புறப்பாட்டில் பங்கேற்போருக்கு பரிவட்டம் பஞ்சாமிர்தம் பித்தளை விளக்கு முருகன் படம் உட்பட பிரசாதங்கள் வழங்கப்படும். இதுபற்றிய விவரங்களை 04545 - 242 236 என்ற எண்ணில் அறியலாம்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X