திண்டுக்கல்லில் இல்லம் தேடி கல்வி; கலெக்டர் அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:31

திண்டுக்கல்--'இல்லம் தேடி கல்வி திட்டத்தில் -8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்க விரும்பும் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் விசாகன் கூறினார்.



அவர் கூறியதாவது: கொரோனாவால் -8ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் 'இல்லம் தேடி கல்வி' எனும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இதில் பள்ளி நேரத்தை தவிர மாணவர்களின் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் கற்றல் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக திண்டுக்கல் உட்பட 12 மாவட்டங்களில் 2 வாரத்திற்கு முன்னோட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.



ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்கள், தன்னார்வலர்கள், பல துறை சார்ந்தவர்கள் இணைந்து இயக்கமாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க குறைந்தபட்சம் 12 ம் வகுப்பு தேர்ச்சி, -8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க இளங்கலை பட்டம் தேர்ச்சி அவசியம்.விருப்பமுள்ளவர்கள் illamthedikalvi.tnschools.gov.in ல் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.



இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இலட்சினை (logo with tag line) உருவாக்கும் போட்டியில் மாணவர்கள், தனிநபர், குழுக்களாகவோ பங்கேற்கலாம். தங்கள் படைப்பை illamthedikalvi@gmail.com அக்.24 க்குள் அனுப்பலாம். சிறந்த படைப்பாளிக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும், என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X