திண்டுக்கல்-திண்டுக்கல்லில் பொது நுாலகத்துறை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடந்தது.மாநிலத் தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நாகராஜன், ஜெயக்குமார் ஜோசப், சண்முகநாதன், பச்சை முத்து, ராஜதுரை, முருகன் முன்னிலை வகித்தனர். பெருமாள் வரவேற்றார். அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் அல்லா பிச்சை, கவுரவ தலைவர் அப்துல் காதர், பொருளாளர் முஷா வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் சரவணன் பேசினார்.'இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். உள் மாவட்டத்திலேயே பணிமாறுதல் வழங்க வேண்டும். தனியாக பணி விதி அமைத்து பதவி உயர்வில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஊர்திப்படியை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்களை நிறைவேற்றினர்.