ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரதமரின் வாழ்த்து அட்டை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரதமரின் வாழ்த்து அட்டை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:41

வத்தலக்குண்டு---கொரோனா தடுப்பு ஊசி 100 கோடி இலக்கை எட்டியதற்காக பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து மடல்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா.ஜ.க.,வினர் மருத்துவர்களிடம் வழங்கினர்.கொரோனா தடுப்பு ஊசி நாடு முழுவதும் 100 கோடியை எட்டியதற்காக பிரதமர் மோடி ரேடியோவில் 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் மக்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அதேபோன்று நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை கடிதம் வாயிலாக அனுப்பியுள்ளார். அக்கடிதங்களை அந்தந்த பகுதி பா.ஜ.க., வினர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களிடம் வழங்கினர். வத்தலக்குண்டில் ஒன்றிய செயலாளர் செந்தில், தொகுதி பொறுப்பாளர் கோவிந்தராஜ், துணைச் செயலாளர் வீரபுத்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X