தங்கப்பத்திர திட்டத்தில்முதலீடு செய்ய அழைப்பு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
தங்கப்பத்திர திட்டத்தில்முதலீடு செய்ய அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:41

திண்டுக்கல்-- -'திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தபால் அலுவலகங்களில் அக்.25 முதல் 29 ஆம் தேதி வரை செயல்படவுள்ள தங்கப் பத்திர திட்டத்தில் சேர்ந்து பொதுமக்கள் பயன் பெறலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தங்கப் பத்திர திட்டத்தில் சேர்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒருவர் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். 5ஆவது ஆண்டில் திரும்ப பெறும் வசதியும், 8 ஆண்டுகள் முடிவில் அன்றைய தங்கத்தின் மதிப்பில் பெறும் வசதியும் உள்ளது.தங்கப் பத்திர முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த வசதியை அக்.25 முதல் 29ஆம் தேதி வரையிலான 5 நாள்கள் மட்டுமே பெற முடியும்.செய்கூலி, சேதாரம்,வரி இல்லாத 24 கேரட் தங்கத்தில் முதலீடு செய்து பொதுமக்கள் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 98421 86024 என்றஎண்ணில் பேசலாம்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X