''வங்கிகளின் வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாய்:மாநில பொதுச் செயலர் கணேசன் | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
''வங்கிகளின் வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாய்:மாநில பொதுச் செயலர் கணேசன்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
01:29

தஞ்சாவூர்:''வங்கிகளின் வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது'' என அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மாநாட்டில் மாநில பொதுச் செயலர் கணேசன் தெரிவித்தார்.



அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க தமிழ் மாநிலக் குழு மாநாடு தஞ்சையில் நேற்று நடந்தது.மாநாட்டிற்கு சங்க தலைவர் ராமபத்திரன் தலைமை விகித்தார். தீர்மானங்கள் குறித்து பொதுச் செயலர் கணேசன் கூறியதாவது:-



நாட்டில் உள்ள வங்கிகளில் விவசாயிகள் பொதுமக்களின் பணம் 101 லட்சம் கோடி உள்ளது. பொதுத் துறை வங்கிகளில் தொழில் துறையில் வாராக்கடன்கள் அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் வாராக்கடன் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.



கடன் வாங்கியவர்கள் பொதுமக்களோ விவசாயிகளோ கிடையாது. கார்ப்பரேட் முதலாளிகள் தான். அவர்கள் வாங்கிய கடனை வாராக்கடனாக அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? பொதுத் துறை வங்கிகளை இணைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை. மாறாக ஊழியர்களை வெளியேற்றும் செயலாகத் தான் பார்க்கப்படுகிறது. வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. ஏ.டி.எம்.மில் பணம் இல்லையென்றால் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X