யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் விரக்தி | மதுரை செய்திகள் | Dinamalar
யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் விரக்தி
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

24 அக்
2021
05:50
பதிவு செய்த நாள்
அக் 24,2021 05:09

திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகள் நெல் நடவு பணிகளை துவக்கியுள்ளனர். தற்போது யூரியா தட்டுப்பாடால் அவதி அடைந்துள்ளனர்.



அவர்கள் கூறியதாவது: நெல் நடவிற்கு முன்பு தொளியில் தழைச்சத்தை அதிகரிக்க யூரியா உரமிட வேண்டும். அப்போதுதான் பயிர்கள் நன்றாக வளரும். தவிர காய்கறிகள் பயிரிட்டுள்ளவர்கள் கலையெடுத்து மேல் உரமாக யூரியா வைக்க வேண்டும். அப்போதுதான் செடிகள் நன்றாக வளர்ந்து காய்கள் திரட்சியாக வளரும்.



ஆனால் யூரியா கிடைக்கவில்லை. அதற்காக காத்திருந்தால் நடவு பாதிக்கப்படும். அறுவடை காலதாமதமாகி எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. தட்டுப்பாட்டை பயன்படுத்தி விலை உயரும். சரியான விலையில் போதுமான அளவு யூரியா கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X