மதுரை-தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில துணைத் தலைவர் பிச்சைமுத்து தலைமை வகித்தார். துணை தலைவர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். துணை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் கோபிநாத், நிர்வாகிகள் விஸ்வநாதன், தினகரன், அமைதி, பரமசிவம், கருப்பையா உள்ளிட்டோர் பேசினர். தெற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.மத்திய அரசு வழங்கியது போல 11 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.7.2021 முதல் வழங்குவது, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.