மதுரை கிரிக்கெட் லீக் போட்டிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
05:15

மதுரை -மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் சோலைமலை இன்ஜி., கல்லுாரி மற்றும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல், 2ம் டிவிஷன் லீக் 20:20 கிரிக்கெட் போட்டிகள் நடந்தன.முதல் டிவிஷன் முதல் போட்டியில் டி.வி.எஸ். கிளப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது(பரத் 38,விஜயகுமார் 35 ரன்கள்). அடுத்து களமிறங்கிய ரைசிங் சன் அணி 16.4 ஓவர்களில் 97 ரன்களுக்கு சுருண்டது. கவிநிலவன் 25, பிரபாகரன் 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினர். 47 ரன்கள் வித்தியாசத்தில் டி.வி.எஸ் அணி வென்றது.அரசரடி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. ரமேஷ் தனராஜ் 81, பிரசாந்த் 60 (நாட்அவுட்) பிச்சைமுத்து 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய ஒலிவா அணி 19.2 ஓவர்களில் 96 ரன்களில் ஆட்டமிழந்தது. ஜெய்சங்கர் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அரசரடி அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.முஸ்டங் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. முகமது அர்ஷத் 48 (நாட்அவுட்) சிவசக்தி 30, மனோஜ் 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அக்னி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது( ராஜவேல் 73, பாலமுருகன் 47 ரன்கள் )ஒரு ரன் வித்தியாசத்தில் முஸ்டங் அணி வென்றது.மெர்க்குரி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. (நவீன் 29,கார்த்தி சங்கர் 28 ரன்கள்) அடுத்து ஆடிய சச்சின் அணி 19.2 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அசோக் 63 ரன், குருஆனந்த் 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.ஸ்பார்க் அணி 17.4 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தது.(கார்த்திக் 31,கேசவன் 25 செல்வகுமார் 4 விக்கெட், சிவக்குமார் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.) அடுத்து களமிறங்கிய விக்டரி அணி 17.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (செல்வகுமார் 38 நாட் அவுட், ராமச்சந்திரன் 25 ரன்கள்)2வது டிவிஷன் முதல் போட்டியில் டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா அணி 122 ரன்கள் எடுத்தது. (தனசேகரன் 42, சிவா 35 ரன்கள்) சூப்பர்சானிக் கன்கார்டு அணி 91 ரன்களுக்கு சுருண்டது (ராம்பிரசாத் 25, முருகன் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்) 31 ரன்கள் வித்தியாசத்தில் டி.வி.எஸ்., அணி வெற்றி பெற்றது.சன் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்தது.(அர்ஜூன் 25,ஜெப்ரி 25 பாலமுருகன் 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்) தயா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்தது. தண்டீஸ்வரன் 65 ரன் (நாட்அவுட்), கணேஷ்குமார் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தயா அணி வெற்றி பெற்றது.மெர்க்குரி லெஜன்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்தது. (சந்தோஷ் 37 ரன்கள்,ராஜ்மோகன் 3 விக்கெட் வீழ்த்தினார். மெஜஸ்டிக் கப்ஸ் அணி 19.4 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (சந்தோஷ் 36, பொன்ராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X