பாத்திமா பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வி உதவித் தொகை வழங்கல் | செய்திகள் | Dinamalar
பாத்திமா பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வி உதவித் தொகை வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
06:02

புதுச்சேரி : கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கினர்.



புதுச்சேரி, கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1990ல் உயிரியல் பாட பிரிவில் படித்த மாணவர்கள், 2014 முதல் ஆண்டு தோறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து, அதே பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துகின்றனர்.கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் ஆக்னல் தலைமை தாங்கினார்.பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஓ ேஷா, பர்வின்குமார், வினோத், மேக்சிமஸ் ஆகியோருக்கு, கல்வி உதவி தொகையாக முன்னாள் மாணவர்கள் ரூ.50 ஆயிரம் வழங்கினர்.பள்ளியில் 2018-19ம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்று பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரிக்கிருஷ்ணன், விக்னேஷ், ஸ்ரீவரதராஜ் கவுரவிக்கப்பட்டனர்.



உதவித்தொகை வழங்க துணையாக இருந்த ஆஸ்தி ரேலியா மனநல மருத்துவர் வைத்தியநாதன், லண்டன் டாக்டர் ஸ்ரீதர், அமெரிக்கா பொறியாளர்கள் ராஜபிரசாத், ராமராவ், ைதராபாத் இன்பார்ம் சாப்ட்வேர் கம்பெனி பொறியாளர் சத்தியநாராயணன், வளவன், அருட்செல்வன் வழி காட்டுதல்படி, புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் லெவிவெர்னிஸ் கன்ட்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் மேத்யூஸ் ஆரோக்கியசாமி, புதுச்சேரி பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தணிகைவேல் பங்கேற்றனர்.கதிர்காமம் மருத்துவ கல்லுாரி பேராசிரியர் பாலசுப்ரமணியன் பேசினார். ஏற்பாடுகளை, கோர்க்காடு அரசு பள்ளி விரிவுரையாளர் ஜான்போஸ்கோ செய்திருந்தார்.கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர் மேக்ஸிமஸ் தாய் கிளாரா கூறுகையில், 'வறுமை காரணமாக என்னால், தொடர்ந்து இப்பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை.



டி.சி. வாங்கி அரசு பள்ளியில் சேர்க்க விரும்பினேன். பள்ளி முதல்வர் எங்களின் ஏழ்மை நிலையை கருதி, கல்வி உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்தார். என் மகன் தற்போது இதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். உதவித்தொகை அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி' என்றார்.கல்வி உதவித்தொகை மூலம் படித்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர் ஸ்ரீவரதராஜ் கூறுகையில், 'முன்னாள் மாணவர்கள் வழங்கிய கல்வி உதவித்தொகை மூலம் பிளஸ் 2 படித்து, பி.எஸ்.சி., நர்சிங் சேர்ந்துள்ளேன். என் தாய் கூலி வேலை செய்து எங்களை படிக்க வைக்கிறார்.



கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார். முன்னாள் மாணவர்கள் அளித்த கல்வி உதவித்தொகை, எங்கள் குடும்பத்தின் மன அழுத்தத்தை குறைத்து, நான் நன்றாக படிக்க உதவியது' என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X