பாகூர் : ரேஷன் கடைகளைத் திறந்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மா.கம்யூ., பாகூர் கொம்யூன் குழு சார்பில், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
கொம்யூன் குழு உறுப்பினர்கள் வடிவேலு, சதாசிவம், கலைச்செல்வன், பிரதேச குழு உறுப்பினர் கலியன், பிரதேச செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வம், தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட வேண்டும். பாகூர் கொம்யூனில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்திட வேண்டும். தொடர் மின்தடையை சரி செய்திட வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து, அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கிட வேண்டும்
உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.கொம்யூன் குழு உறுப்பினர் ஹரிதாஸ், இளவரசி, கிளை செயலாளர்கள் வெங்கடாச்சலம், வளர்மதி, சங்குநதி, வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.