வாலிபருக்கு கத்தி குத்து 5 பேர் மீது வழக்கு பதிவு 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
06:16

பாகூர் : பாகூரில் தனியார் பள்ளி ஊழியர் மற்றும் அவரது மகன்களை தாக்கிய, 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.



பாகூர், தெற்கு வீதியை சேர்ந்த விஜயன் 55; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிகிறார்.இவரது மகன் பரத்சஞ்ஜெய், 20. இவரது உறவினர் மகன் சூர்யா, 22. இருவரும் கடந்த 21ம் தேதி இரவு, அங்குள்ள தனியார் பள்ளியின் எதிரே பைக்கில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.அவ்வழியாக பைக்கில் வந்த பாகூர் மேற்கு வீதியை சேர்ந்த நவீன், கமலேஷ், விஜயக்குமார் உள்ளிட்டோர், பரத்சஞ்ஜெய் மீது மோதி உள்ளனர். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த அவர்கள், பரத்சஞ்ஜெயை ஆபாசமாக திட்டி, கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.



தகவலறிந்த பரத்சஞ்ஜெய்யின் தந்தை விஜயன், மூத்த மகன் பரத்வாஜ் ஆகியோர் அங்கு சென்றனர்.இதற்கிடையே நவீனின் பெற்றோர் சுப்ரமணிய சந்திரபாரதி, ராணி மற்றும் விஜயகுமார், கமலேஷ் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர். இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. விஜயன் மற்றும் அவரது மகன்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.காயமடைந்த விஜயன் மற்றும் அவரது மகன்கள் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.புகாரின் பேரில், சுப்ர மணிய சந்திர பாரதி, அவரது மனைவி ராணி, மகன் நவீன், கமலேஷ், விஜயக்குமார் ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X