வங்கி கடன் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
07:50

விழுப்புரம் : நபார்டு வங்கி சார்பில் 6,802.32 கோடி ரூபாய் வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கையை, கலெக்டர் வெளியிட்டார்.



விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் மோகன் வெளியிட்டு பேசியதாவது:தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) 2022-23ம் ஆண்டிற்கு, விழுப்புரம் மாவட்டத்திற்கு வளம் சார்ந்த வங்கி கடன் 6,802.32 கோடி ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இது இந்தாண்டுக்கான வங்கி கடன் திட்டத்தைக் காட்டிலும் 18 சதவீதம் கூடுதலாகும்.



இந்த திட்டத்தில், விவசாயத்திற்கான வங்கி கடன் 5,119.45 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 3,079.76 கோடி ரூபாய் விவசாய குறுகிய காலகடனும், 2,039.69 கோடி ரூபாய் விவசாய நீண்ட கால கடனாகும்.சிறு, குறு தொழில்களுக்கு 680.54 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்ற கொள்கையை மனதில் கொண்டு, வீட்டு வசதி கடன் பிரிவில், 272.06 கோடி ரூபாய் மற்றும் கல்விக் கடன் பிரிவில் 203.04 கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளதால் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தில், விவசாயம் சார்ந்த காலக்கடன் மற்றும் விவசாய கடனுக்கு முக்கியத்துவம் அளித்து, மொத்த திட்டத்தில் 75 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.



இவ்வாறு கலெக்டர் பேசினார்.திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) காஞ்சனா, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ரமணன், முன்னோடி வங்கி மேலாளர் அரிஹரசுதன், நபார்டு வங்கி மாவட்ட உதவி பொது மேலாளர் (மாவட்ட வளர்ச்சி) ரவிசங்கர் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X