மியாட் மருத்துவமனை நிபுணர்கள் 30ல் புதுச்சேரி, 31ல் கடலுார் வருகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
08:01

புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இரைப்பை, குடல், புற்றுநோய் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் ஆலோசனை வழங்க, புதுச்சேரிக்கு வரும் 30ம் தேதி, கடலுாருக்கு, 31ம் தேதி வருகின்றனர்.



சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இரைப்பை, குடல் சிகிச்சை, எடை குறைப்பு நிபுணர் கார்த்திக் மருதாச்சலம், புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சுமன் கல்யாண் ஆகியோர், புதுச்சேரிக்கு வரும் 30ம் தேதி வந்து, மாலை 5:00 முதல், இரவு 9:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர்.இந்த ஆலோசனை முகாம், எண்: 30/11, அம்பாள் நகர் மெயின்ரோடு, குண்டுப்பாளையம் பேட்ரிக் பள்ளி அருகில், ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில் நடக்கிறது.



கடலுாரில் மறுநாள்31ம்தேதி, ஆற்காட் மருத்துவமனை, எண்: 30, 31, ஏ.எல்.சி. வளாகம், கடலுார் என்ற முகவரியில், காலை 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை முகாம் நடக்கிறது.முகாமில் வயிற்று புண், வயிற்று வலி, செரிமான மண்டலத்தில் ரத்த போக்கு, கடுமையான வயிற்று வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், அஜீரணம், குமட்டல், வாந்தி, வெளிர் பிற ரத்தம், தார் பிற மலம், எடை இழப்பு, பசியிழப்பு, விழுங்குவதில் சிரமம் பிரச்னை உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம்.மேலும் , தோலுக்கு அடியில் கட்டி, எடையில் மாற்றங்கள், களைப்பு, தொடர் இருமல், சுவாச பிரச்னை, தொண்டை கட்டுதல், நீடித்த காலமாக தசை அல்லது மூட்டு வலி, விவரிக்க முடியாத ரத்தபோக்கு அல்லது சிராய்ப்புகள், பெண்களுக்கான மார்பக கட்டி, கர்ப்பப்பை புற்றுநோய், அசாதாரண கருப்பை ரத்தபோக்கு அல்லது வெளியேற்றம் உள்ளிட்ட புற்றுநோய் அறிகுறி பிரச்னைகளுக்கு தீர்வு பெறலாம்.



முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் அவசியம் கொண்டு வரவேண்டும். முகாமிற்கு வர முன் பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம்-200 ரூபாய். முன்பதிவுக்கு 78240-60011,98412-68500 ஆகிய மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X