பா.ம.க., நிர்வாகி படுகொலை வழக்கில் இருவரை பிடித்து போலீஸ் விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
08:14

காரைக்கால் : காரைக்காலில் படுகொலை செய்யப்பட்ட பா.ம.க., மாவட்ட செயலாளரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மருத்துவமனை முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



காரைக்கால், திருநள்ளாறு, மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் தேவமணி, 50; காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலாளர். இவருக்கு மாலா என்ற மனைவி, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் , திருநள்ளாறு தேரடியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். பின் தொடர்ந்து, மூன்று பைக்குகளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், தேவமணியை வழி மறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டியது.கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் தேவமணி உயிரிழந்தார். அவரது உடலை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.தகவல் அறிந்த பா.ம.க., தொண்டர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, விபத்து சிகிச்சை பிரிவின் கதவை உடைத்தனர்.



அவர்களிடம் போலீஸ் எஸ்.பி.,க்கள் வீரவல்லபன், ரகுநாயகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பதட்டத்தை தணிக்க , திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட தேவமணியின் உடலை வாங்க மறுத்து பா.ம.க., வினர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று அரசு மருத்துவமனை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை கலெக்டர் ஆதர்ஷ், எஸ்.பி., வீரவல்லபன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேசி, சமாதானம் செய்தனர்.கொலை சம்பவம் தொடர்பாக திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து, இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.



அதை தொடர்ந்து, தேவமணி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருநள்ளாறில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு புதுச்சேரி பா.ம.க., மாநில அமைப்பாளர் தன்ராஜ் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.மாலை 6.௦௦ மணிக்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நளன் குளம், இந்திரா நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து பதட்டம் நிலவுவதால், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X