நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 ரவுடிகள் கைது | செய்திகள் | Dinamalar
நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 ரவுடிகள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
08:21

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் ஆட்டோ டிரைவரை கொலை செய்ய திட்டம் தீட்டி, ஆயுதங்களுடன் திரிந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.



அவர்களிடமிருந்து கத்தி, 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி, அரியாங்குப்பம், புதுக்குளத்தை சேர்ந்தவர் குணா, 35; ஆட்டோ டிரைவர். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த அஜித் என்பவருக்கு முன்விரோதம் இருந்தது. கடந்த 19ம் தேதி அரியாங்குப்பம் கடைக்கு வந்த குணாவை தாக்கியது தொடர்பாக, அஜித், அவரது நண்பர்கள் ரிஷி, சண்முகம் ஆகிய மூன்று பேர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வந்தனர்.



இந்நிலையில் நேற்று, அரியாங்குப்பம் பழைய ஆற்று பாலம் அருகே அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை மடக்கி, சோதனை செய்த போது, நாட்டு வெடிகுண்டுகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது.அவர்களை விசாரித்ததில், அரியாங்குப்பம், புதுக்குளத்தை சேர்ந்த அஜித், 20; என்கிற லோகநாதன், நெல்லித்தோப்பை சேர்ந்த ரிஷிகுமார், 21; என்பதும், ஆட்டோ டிரைவர் குணாவை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.



இதையடுத்து, தெற்கு எஸ்.பி., கிருஷ்ணகுமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்கு பதிந்து அஜித், ரிஷிகுமார் ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மூன்று நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு கத்திகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள் மீதும் பல்வேறு கொலை, மற்றும் கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்த ரவுடி சண்முகம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X