மேற்கு பகுதி செழிப்பு; கிழக்கில் வறட்சி... கருணை காட்டுங்க!குளம், குட்டைகளுக்கு உபரிநீர் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
00:00

கிணத்துக்கடவு:பி.ஏ.பி., திட்ட அணைகள் நிரம்பி வழியும் நிலையில், கிணத்துக்கடவு கிழக்குப்பகுதி கிராம நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் சரிந்துள்ளது. உபரிநீரையாவது இப்பகுதியில் உள்ள, 15க்கும் மேற்பட்ட குட்டைகளில் நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாகும்.கிணத்துக்கடவில் இருந்து, 40வது கி.மீ.,ல், பாலக்காடு கணவாய் அமைந்துள்ளது.


கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், தென்மேற்கு பருவகாலத்தில், இந்த கணவாயை கடந்து வரும் மேகங்களால், மூன்று மாதங்களுக்கு இடைவிடாது பருவமழை பெய்யும். குளம், குட்டைகள், பாசன கிணறுகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறும்.பருவநிலை மாற்றத்தால் மழையின் அளவு குறைந்து, தற்போது, கிணத்துக்கடவு மேற்கு பகுதி கிராமங்கள் மட்டும் தென்மேற்கு பருவமழையால் வளம் பெருகின்றன.


குறிப்பாக, கண்ணமநாயக்கனுார், சொக்கனுார் மற்றும் முத்துக்கவுண்டனுார் கிராம தடுப்பணைகளில் தற்போதும் நீர் நிரம்பி வழிகின்றன.ஆனால், கிணத்துக்கடவு ஒன்றியத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காட்டம்பட்டி, காட்டம்பட்டிபுதுார், கப்பளாங்கரை, மெட்டுவாவி, மன்றாம்பாளையம், பெரியகளந்தை, தாசநாயக்கன்பாளையம், காரச்சேரி, வடசித்துார், அரசம்பாளையம், கொண்டம்பட்டி கிராமங்களில் உள்ள, 15க்கும் மேற்பட்ட மழைநீர் சேமிப்பு குட்டைகள் கடந்த, மூன்று ஆண்டுகளாக வறட்சியில் தவிக்கின்றன.


தென்மேற்கு பருவமழை, கிணத்துக்கடவு கிழக்கு பகுதியில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. நிலத்தடி நீர் மட்டம் உயராத காரணத்தால், பாசன கிணறுகளின் நீர் மட்டமும் உயராமல் குறைந்து வருகிறது. வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை, பலமாக பெய்ய வேண்டும் என, விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


தற்போது, பி.ஏ.பி., அணைகளின் நீர் மட்டம் குறையாமல் உள்ளதோடு, வெளியேற்றப்படும் உபரி நீர், கிராம குட்டைகளுக்கு திறக்கப்படுகிறது. ஆனால், கிணத்துக்கடவு கிழக்கு பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் நிரப்பவில்லை.இதற்கு எம்.எல்.ஏ., எம்.பி., கோவை மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் குளம், குட்டைகளை நேரில் பார்வையிட்டு, பி.ஏ.பி., நீரை கிராம குட்டைகளில் நிரப்புவதோடு, கோதவாடி குளத்துக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


விவசாயத்தை பாதுகாக்கணும்!


வடசித்துார் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளாக, கிழக்குப்பகுதி குட்டைகளில் நீர் விட்டு நிரப்பவில்லை. இந்த ஆண்டு போதிய மழையும் இல்லாத நிலையில், பி.ஏ.பி., திட்ட உபரி நீரையாவது குளம் குட்டைகளுக்கு வழங்க வேண்டும்.இப்பகுதியில் உள்ள, 15 குட்டைகளுக்கு பி.ஏ.பி., நீர் வினியோகித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, சப் - கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X