பெயரளவில் வழங்கப்பட்ட இழப்பீடு தொகை; விவசாயிகள் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
00:30

ராமநாதபுரம் : மாவட்டத்தில் 2020-21 சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையாக ரூ.2.42 கோடியை தேசிய வேளாண் காப்பீட்டு கழகம் வழங்கியுள்ளது. இத்தொகை பெயரளவில் ரூ.150 முதல் ரூ.2500 வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ. பல ஆயிரம் இழப்பீட்டு தொகை கிடைக்கும், சாகுபடிக்கு செலவழிக்க நினைத்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



மாவட்டத்தில் மானாவாரியாக 1.28 லட்சம் எக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் நெல்சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபருக்கு முன்னதாகவே வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர்.இந்நிலைமையில் கடந்த ஜனவரியில் அறுவடை சமயத்தில் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது.



தற்போது மழை பெய்துஉள்ளதால் தற்போது வரைசம்பா நெற்பயிர் 1 லட்சத்து 19 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். நேரடி விதைப்பு பணிகள் முடிவடைந்து களை எடுத்தல், உரமிடும்பணி நடக்கிறது. 2020-21 காப்பீட்டு செய்தவர்களுக்கு இழப்பீட்டுதொகை ரூ.பலஆயிரம் வரும் அதனை சாகுபடி பணிக்கு செலவழிக்கலாம் என விவசாயிகள் காத்திருந்தனர்.



இந்த நிலையில் தேசிய வேளாண் காப்பீட்டு கழகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 5070 விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையாக ரூ.2.42 கோடி வழங்கியுள்ளது. இத்தொகை பெயரளவில் ரூ.150 முதல் ரூ.1100 என வரவு வைத்துள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.



கடலாடி பாசன விவசாயிகள் வட்டார தலைவர்பாக்கியநாதன் கூறுகையில், '1,58,000 விவசாயிகள் ரூ.350 வரை பிரிமீயம் செலுத்தி காப்பீடு செய்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.16ஆயிரம் இழப்பீடு தர வேண்டும். ஆனால் தற்போது ரூ.150 முதல் ரூ.2000 வரை வரவு வைக்கின்றனர்.இதனால் விவசாயிகள் மனவேதனை அடைந்துஉள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உரிய காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X