திருவள்ளூரில் 64 கிராமங்களுக்கு வெள்ள அபாய... எச்சரிக்கை! பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் நிரம்பியதால் நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
00:38

பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, இன்று, அதன் உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அபாயம் உள்ளது.



எனவே, ஆரணி ஆற்றின் கரையோரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 64 கிராமங்களுக்கு, மாவட்டநிர்வாகத்தின் சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாறு நீர்த்தேக்கம் உள்ளது.



இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு, 281 அடி. தொடர் மழையால், நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துஉள்ளது. நேற்று முன்தினம், காலை 6.00 மணி நிலவரப்படி நீர்த்தேக்கத்தில், 279.45 அடி அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.இதையடுத்து, நீர்த்தேக்கத்திற்கு தொடர்ந்து வரும் உபரி நீரால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிட, சித்துார் மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று, சத்தியவேடு எம்.எல்.ஏ., கோனேட்டி ஆறுமுகம், பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, உபரி நீரை திறந்து வைக்கிறார்.



தடை விதிப்பு



இந்த நீரானது, ஆந்திர மாநில எல்லையான, சுருட்டப்பள்ளி அணைக்கட்டுக்கு கீழ் உள்ள ஆரணியாற்றில் ஓடும். ஆரணியாறு ஆந்திர மாநிலம், நகரி மலைக் குன்றுகளில் இருந்து உருவாகி, 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது.அங்கிருந்து சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், எ.என்.குப்பம், லட்சுமிபுரம் வழியே, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து, பழவேற்காடு அருகே, புலிக்காட் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது.



ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், ஆற்றின் இருபுறமும் உள்ள, ஊத்துக்கோட்டை, சிட்ரபாக்கம், பேரண்டூர், காக்கவாக்கம், ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், பெரியபாளையம், நெல்வாய், மங்களம் உள்ளிட்ட 64 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்தோர், ஆற்றின் இரு கரைகளிலும் நடமாடவும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.



உத்தரவு


பாதுகாப்பு காரணங்கள் கருதி, அனைத்து துறை அதிகாரிகளும் மேற்கண்ட கிராமங்களில் தங்கியிருக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.மேலும், தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கும் செல்ல வேண்டும். இதை வருவாய் துறை, காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தியுள்ளார்.பிச்சாட்டூர் ஏரிக்கு வினாடிக்கு, 200 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. இதனால் முழுக்கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது.



ஏரியின் பாதுகாப்பை கருதி, இன்று, காலை 9:00 மணிக்கு சத்தியவேடு எம்.எல்.ஏ., கோனேட்டிஆறுமுகம் முன்னிலையில், வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கும். இதனால் தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.ஆந்திர மாநில பொதுப்பணித் துறை'தண்டோரா' போட்டு எச்சரிக்கைபிச்சாட்டூர் ஏரியில் உபரி நீர் திறக்கப்படுவதால், ஊத்துக்கோட்டை துவங்கி, 64 கிராமங்களுக்கு முன் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.



கரையோர கிராமங்களில் உள்ளவர்களுக்கு 'தண்டோரா' போட்டு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அந்தந்த வி.ஏ.ஓ.,க்கள் கிராமங்களில் தங்கி நிலவரங்களை கண்காணிப்பர். எஸ்.ராமன், தாசில்தார், ஊத்துக்கோட்டை



நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X