கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயம் தாமதமாகிறது | சிவகங்கை செய்திகள் | Dinamalar
கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயம் தாமதமாகிறது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
00:40

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயம் தள்ளிப்போகிறது.



இவ்வொன்றியத்தில் சிங்கம்புணரி, பிரான்மலை, எஸ்.மாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து சில கண்மாய்கள் நிரம்பிய நிலையில் விவசாயிகள் பலர் விவசாயப் பணியை துவக்கியுள்ளனர். ஏற்கனவே உழவுப்பணிகளை முடித்து விதைநெல் பாவியிருந்தனர்.நாற்றுகள் வளர்ந்துள்ள நிலையில் நடவு செய்ய கூலி ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.



பெரும்பாலான விவசாய கூலி ஆட்கள் வேலை உறுதி திட்ட பணிகளுக்கு சென்று விடுவதால் விவசாய பணிகளுக்கு இப்பகுதியில் ஆள் கிடைக்கவில்லை. விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொரு வயல்களாக நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பல இடங்களில் விவசாயம் தள்ளிப்போகிறது. அதே நேரம் உழவு, நடவு மற்றும் களை எடுத்தல் பணிகளுக்கு இயந்திரங்களின் தேவை அதிகமாக உள்ளது.



குறிப்பிட்ட சில விவசாயிகளிடம் மட்டுமே அதற்கான இயந்திரங்கள் உள்ளன. இயந்திரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கிடைப்பதில்லை. எனவே அனைத்து வகை விவசாய இயந்திரங்களையும் விண்ணப்பித்த ஓரிரு நாட்களுக்குள் உரிய மானியத் தொகையுடன் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X