தீபாவளி திருடர்கள் 7,800 பேர் பட்டியல் தயார்! கைவரிசை காட்டும் முன் மடக்கிப்பிடிக்க போலீஸ் வியூகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
00:46


சென்னை : பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி, செயின் பறிப்பு, பிக் பாக்கெட் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை மடக்கி பிடிக்க, சென்னை காவல் துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



அந்த வகையில், சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திருடர்கள் கை வரிசை காட்டும் முன்பே, அவர்களை மடக்கி பிடிக்க, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, 6,000 போலீசார் பண்டிகை கால பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாடு முழுவதும் வரும் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை களைஇழந்தது. இந்நிலையில், அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்காளால், கொரோனா பரவல் அச்சம் குறைந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு தீபாவளி 'ஷாப்பிங்' சூடுபிடித்துள்ளது. விடுமுறை நாளான நேற்று, தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஏராளமானோர் ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிச் சென்றனர். கண்காணிப்புஅதே போல், சென்னை மற்றும் புறநகரின் முக்கிய பகுதிகளில் பட்டாசு விற்பனையும் சூடுபிடித்துஉள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருடர்கள் கை வரிசை காட்டுவது வழக்கம். பெண்கள், குழந்தைகளிடம் செயின் பறிப்பு, ஆண்களிடம் பிக் பாக்கெட் உள்ளிட் வகையில், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவர். மேலும் சில 'பலே' திருடர்கள், முதியவர்களை குறிவைத்து, அவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் நகை மற்றும் பணத்தை திருடிச் செல்வர். இதுபோன்ற நபர்களை கைது செய்யவும், குற்றங்களை தடுக்கவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தி.நகர் முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தி.நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட இடங்களில்,100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அங்கு, ஆறு இடங்களில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.அதில், தொலைநோக்கி வாயிலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட இடங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகளை, அங்கு அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து போலீசார் கண்காணிக்கின்றனர்.அத்துடன், கூட்ட நெரிசலில் ஊடுருவும் திருடர்களை கைது செய்ய, சாதாரண உடைகளில், ஆண், பெண் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடைகளில், சிறிய அளவிலான 'கேமரா' பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் கைகளில் பெண் போலீசார், அடையாள அட்டைகளை அணிவிக்கின்றனர். போலீசார் ஒலி பெருக்கி வாயிலாக, எச்சரிக்கை செய்த வண்ணம் உள்ளனர்.போலீஸ் பாதுகாப்புநகை அணிந்து வரும் பெண்களின் கழுத்தை மறைக்கும் வகையில், காகித பட்டைகளை வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மாம்பலம் ரயில் நிலைய பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



உஸ்மான் சாலை - ரங்கநாதன் தெரு சந்திப்பு, போத்தீஸ் சந்திப்பு, தி.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பொது மக்கள் சிரமின்றி சாலையை கடக்க 'ரோப்' கட்டப்பட்டுள்ளது. பாண்டி பஜார் முழுதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாரிமுனை, புரசைவாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர், அண்ணா நகர், மாதவரம் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கேயும், உயர் கோபுரங்கள் அமைத்தல், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது.இதன் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடும் முன்பே, குற்றவாளிகளை மடக்கி பிடிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இம்மாதம், 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று சென்னை முழுதும் கூட்டம் அலைமோதும். இதனால், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் களம் இறக்கப்பட உள்ளனர். காட்டிக் கொடுக்கும் 'மொபைல் ஆப்' பண்டிகை கால சிறப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:சென்னையில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தி.நகர் உள்பட, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 'பேஸ் டிடெக் ஷன் சாப்ட்வேர்' என்ற 'மொபைல் ஆப்' வாயிலாக, 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



இந்த ஆப் வாயிலாக, மொபைல் போனில் சந்தேக நபர்களை படம் எடுத்தால், அவர்கள் மீது வழக்கு உள்ளதா, பழைய குற்றவாளிகளா என்பதை காட்டிக் கொடுத்துவிடும். 'ட்ரோன், பைனாகுலர், சிசிடிவி' என நவீன சாதனங்களையும் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தி வருகிறோம். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் இணைந்து பணியாற்றும் வகையில், 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு, போக்குவரத்து சீர் செய்தல், குற்றவாளிகளை கைது செய்தல் என்பதோடு அல்லாமல், கொரோனா பரவல் தடுப்பு பணிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.சிறு வியாபாரிகள் உற்சாகம்சென்னையின் வர்த்தக பகுதியான வண்ணாரப்பேட்டை, எம்.சி., ரோட்டில் விடுமுறை தினமான நேற்று, துணிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கடை, கொத்தவால்சாவடி பகுதிகளில், தீபாவளி பண்டிகையையொட்டி பலசரக்கு பொருள்கள் விற்பனை அதிகரித்தது. கூட்டத்தை பயன்படுத்தி பிக் பாக்கெட், வழிப்பறி போன்ற செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபடாத வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



எம்.சி., ரோடு, கொத்தவால்சாவடி, பூக்கடை முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வப்போது, ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க, சமூக இடைவெளியை பின்பற்றவும் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.விடுமுறை நாளான நேற்று, பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த சாலையோர சிறு வியாபாரிகள், தற்போதைய தீபாவளி பண்டிகை விற்பனையால் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X