குற்ற சம்பவங்களில் சிறார்கள், இளைஞர்கள்... காரணமென்ன?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
00:53

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மது, கஞ்சா போதையில் இருந்துள்ளனர். இதில் சிறார்கள், இளைஞர்கள் சமீப காலங்களாக தடம் மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.



மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளாக கொலை, கொள்ளை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின்பு அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதில் ஈடுபடுவோர் இளைய வயதினர் என்பது போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் தான். கொலைகள், கொள்ளைகள், திருட்டு, மணல் கடத்தல், சட்டவிரோத பொருட்கள் விற்பனை என பலவற்றிலும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் அதிகஅளவில் ஈடுபடுகின்றனர்.



கடந்தாண்டு பழநி இரட்டை கொலை வழக்கு முதல் கடந்த மாதம் தலைதுண்டிக்கப்பட்ட நிர்மலா கொலை சம்பவம் வரை கைதானவர்களில் 90 சதவீதத்தினர் 28 வயதிற்குட்பட்டவர்கள்.பள்ளி, கல்லூரி, வேலையென வாழ வேண்டிய வயதில் தடம் மாறி சிறை செல்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் போதைதான். மது, கஞ்சா, புகையிலை பொருட்கள் போன்றவற்றிற்கு அடிமையாகி விடுகின்றனர். இதனை பயன்படுத்தி முக்கிய புள்ளிகள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுத்துகின்றனர்.



இதுஒரு புறம் என்றால், மற்றொரு புறம் குற்றம் செய்பவர் ஒருவர், கைதாவது இவர்களை போன்ற இளைஞர்கள் என்ற கணக்கும் உண்டு.ஒரு வழக்கில் அதிக நபர்கள் குற்றம் சாட்டப்பட்டால் வழக்கை எளிதாக உடைத்து விடலாம் எண்ண ஓட்டமும்தான் இதற்கு காரணம். அதேபோல் கொரோனா ஊரடங்கால் ஏற்படும் வறுமையையும் இளைஞர்களின் பின்னணியில் இருப்பவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.



இளைஞர்கள், சிறார்களை நல்வழிபடுத்தவில்லையேல், வரும் தலைமுறை பெரும் சிரமத்தை சந்திக்கும். பெற்றோர், போலீசார், சமூக ஆர்வலர்கள், தனியார் சமூக நல அமைப்புகள் இதில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-202121:37:43 IST Report Abuse
அப்புசாமி இதுக்கும் சேத்து பெரியவரை மெடல் குத்திக்கச் சொல்லலாம். வருஷம் ரெண்டு கோடி பேருக்கு வேலை குடுத்திருக்காரே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X