இருளர் குடும்ப திருமண நிகழ்ச்சி: 'நல்லதொரு மாற்றம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 அக்
2021
01:44
பதிவு செய்த நாள்
அக் 25,2021 00:58

உத்திரமேரூர் : காட்டுக்குள் உள்ள கன்னிக்கோவில், குளத்தங்கரையோர அய்யனார் கோவில், ஏரிக்கரையோர வேப்ப மரத்தடி என, இருளர் குடும்ப திருமண நிகழ்ச்சி ஒரு வட்டத்திற்குள் முடிந்து விடுவது வழக்கம்.



உத்திரமேரூர் சுற்று வட்டார கிராமங்களில், இருளர் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு கல்யாணம் என்பது, மணமக்கள் சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தினர் காதோடு காது வைத்தாற் போல திடீரென தீர்மானித்து நடத்தி முடிப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.கெட்டி மேளம் கொட்டாமல், அர்ச்சகர் எவரும் இல்லாமல், குறைந்த சொந்தங்களை கொண்டு திருமணத்தை முடித்து அதையே சிறப்பானதாக கருதி வந்தனர்.



இந்நிலையில், காலையில் திருமணத்தை முடித்து, மத்தியானம் ஆற்றங்கரையோரம் மது, மாமிசம் என விருந்து வைத்து, திருமணம் முடித்துக் கொள்வர்.5,000 - 10 ஆயிரம் ரூபாய் வரை இருந்தாலே கல்யாணம், சீறும் சிறப்பாக நடந்தேறியது.ஆனால், சில ஆண்டுகளாக காலத்தின் மாற்றத்தால், இருளர் குடும்ப திருமண நிகழ்ச்சிகள் ஆங்காங்கே ஓரளவு மாற்றம் ஏற்பட்டு வருகின்றன.



வெளியூர் சொந்தங்களை ஒருங்கிணைத்தல், பேனர் வைத்து விளம்பரம் செய்தல், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அளித்தல் என, பல மாற்றங்களை உண்டு பண்ணி வருகின்றனர்.இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியம், மதுார் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவரின் திருமணம் திருமுக்கூடல் ஆர்.கே.ஆர்., மண்டபத்தில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, பஞ்சுப்பேட்டையில் உள்ள தன் மாமன் மகள் சந்திராவை மணம் முடித்தார்.



சந்துரு கூலி வேலைக்கு செல்பவர் தான். எனினும், மண்டப வாடகை செலவு மட்டும் 25 ஆயிரம் ரூபாய்.இன்னிசை கச்சேரி, கொடி தோரணம், பேண்டு வாத்தியம் முழங்க மணமக்கள் ஊர்வலம், இரவு மற்றும் காலையில் அறுசுவை உணவு என. 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து திருமணத்தை முடித்துள்ளார்.



இருளர் மக்கள் மட்டுமின்றி, மதுார், திருமுக்கூடல், பழையசீவரம் பகுதியை சேர்ந்த ஊராட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என. அனைத்து தரப்பினரும் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். திருமண செலவு அதிகம்தான் எனினும், இந்த மாற்றம் சமூக சீர்திருத்தத்திற்கு உகந்தது தான் என, அப்பகுதியினர் பலரும் வரவேற்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-அக்-202119:39:01 IST Report Abuse
மலரின் மகள் ஆம் முன்னேறிய தமிழ் சமுதாயத்தில் இன்றளவும் இருளர் வாழ்கை இருட்டோடு தான். எஸ் டி வரம்பில் இருந்தாலும் சலுகைகளை பெற்று இச்சமூகம் முன்னேறவில்லை. காரணம் தெரியவில்லை. சமூக நலத்துறை செய்யவேண்டிய காரியங்கள் உண்மையாக நிரம்ப இருக்கிறது என்று தெரிகிறது. சோசியல் ஸ்டடிஸ் படித்தவர்களை கொண்டு அரசு இவர்கள் வாழ்விற்கு சிறப்புக்களை கொண்டு வரலாம். சாதி சான்றுகள் கிடைப்பதில் கூட மிகவும் கடினமாக இருக்கிறது. தாசில்தார் அலுவலகத்தில் அதற்கான சிக்கல்களை நீக்குவதற்கு சட்டமாற்றங்கள் என்ன என்று அறிந்து அதை சட்டமன்றம் மூலம் சட்டமாக்கலாம். பாம்பு பிடிக்கும் வேலை, விஷமுறிவு விஷமெடுப்பது என்ற தொழில்களை செய்து வந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் அந்த குலத்தொழில்கள் மூலம் கோடிகளில் சம்பாதிக்க முடியும். விஷம் தேவைப்படுகிறது நிறைய விஷயங்களுக்கு. தங்களை நகரவாசிகளுடன் இணைத்து கொண்டு வாழ பழகிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இவர்களுக்கு நகர வாசிகள் மீதான கண்ணூட்டம் காரணமாக இருக்கலாம். இவர்கள் வாழும் பகுதியில் அரசு அதிகாரிகள் தோரணையாக வந்து செல்வதோடு சரி என்று தோன்றுகிறது. மற்றவர்களுடன் இவர்களுக்கு நெருக்கம் இல்லை. திருமணம், ஆண் குறைந்தது இரண்டிலிருந்து நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்கிறார்ன். பெண்ணின் திருமண வயது பதினாறு முதல் பதினெட்டுக்குள் இருக்கிறது. அரசு விதிகள் சட்ட திட்டங்கள் சென்று அடையாத வாழ்க்கை முறை. அனைவருக்கும் தெரியும் படியாக திருமணம் நடவாமல் இருப்பதாலும் ஆண் செய்து கொள்ளும் திருமணங்கள் மனைவிக்கும் மனைவி வீட்டாருக்கும் கூட தெரிவதில்லை போலும். உடலுழைப்பே உணவிற்கு வழிகோலுகிறது இவர்கள் சமூகத்தில். திராவிடம் பேசுவோர் சமுதாய சிறப்புக்களை முன்னெடுப்போர் கன்டுகொள்ளாமல் இருக்கின்ற பல சாதிகள் இருக்கின்றன. நரிக்குறவர்களும் அதில் அடக்கம். ஆதி தமிழர்கள் என்று கூறிவிட்டு சென்று விடுகிறது சமூக அமைப்பின்வழி கட்சிஉருவாக்கி கொண்ட கட்சிகள். திருமண முறையில் வரும் மேம்பாடுகள் நிச்சயம் சமூக மாற்றங்களுக்கு வழிகோலும். தினமலர் தெரிந்தெடுத்து வெளியிடும் செய்திகளை செய்தியாக பார்க்காமல் ஆத்மார்த்தமாக நோக்கவேண்டும். குறிப்பாக தமிழர் நாகரிகம் பண்டைய வரலாறு சார்ந்த செய்தி கட்டுரைகளில். சசிரேகா சந்தோஷ் என்பவர் இச்சமூக பெண்களின் வாழ்க்கையை பற்றி ஆராய்ச்சி செய்து எம் பில் பட்டம் பெற்றிருக்கிறார், பெங்களூரு கிறிஸ்து பல்கலையில். காஞ்சிபுரத்து செய்திகள் என்பதால் சற்று கவனமாக படித்தேன் இந்த செய்தியை. பூக்கடை சத்திரம் அருகில் இருக்கும் வன்னிய சங்கம் பள்ளியில் காக்கா ஸ்கூல் என்பார்கள் அங்கு இந்த பெண்களில் ஒருவரை சந்தித்ததாக ஞாபகம் வருகிறது. கூகுளில் இருளர்களின் திருமண வாழ்த்து எப்படி சொல்வார்கள் என்று தேடிப்பார்த்தேன். கூகுளில் இதெல்லாம் கிடையவே கிடையாது. தலிபான் என்று தேடினால் கோடிகளில் காண்பிக்கும். கூகுள் ஒரு சிறந்த களஞ்சியம் அல்ல என்று கொள்ளலாம்.
Rate this:
Cancel
Karthik M - Frankfurt,ஜெர்மனி
25-அக்-202111:48:32 IST Report Abuse
Karthik M மாறவேண்டியது நாம், அவர்களல்ல
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
25-அக்-202108:44:31 IST Report Abuse
Arul Narayanan இதில் சீர்திருத்தம் எங்கே உள்ளது? ஆடம்பரம் எனும் சீர்கேடு தான் நுழைந்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X