நத்தம்- - அலங்காநல்லுார் பஸ் நிறுத்தத்தால் அவதி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
நத்தம்- - அலங்காநல்லுார் பஸ் நிறுத்தத்தால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
01:04

நத்தம் : நத்தத்தில் இருந்து அலங்காநல்லூர் வரை காலை, மதியம், மாலை நேரங்களில் டவுன் பஸ்கள் இயங்குகின்றன. கடந்த சில நாட்களாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த பஸ் சேவை மதிய வேளைகளில் திடீரென நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்கும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.



இந்தப்பகுதி விவசாயம் சார்ந்த மலைப்பகுதி என்பதால் இங்கே விளைவிக்கப்படும் கொய்யா, தக்காளி போன்ற விரைவில் அழுகக்கூடிய பொருட்கள் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். குறித்த நேரத்திற்கு பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ''நத்தம் டெப்போவில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால், பலநேரங்களில் பஸ்சை இயக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தால் பஸ் தொடர்ந்து இயங்கும். அதற்கு உரிய நடவடிக்கை தேவை'' என்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X