'மரம் நடுவது இறைவனுக்கு செய்யும் சேவை'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
01:08

பொங்கலுார்:காங்கயம் அடுத்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 25 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு இந்து சமய அறநிலையத்துறை, 'வனத்துக்குள் திருப்பூர்', காங்கயம் 'துளிகள'் அமைப்பு சார்பில், மரம் நடும் விழா நடந்தது. அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன் வரவேற்றார்.இங்கு 5,250 மரக்கன்று நடப்படவுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், கிருஷ்ணகுமார், சுந்தர், சுரேஷ்குமார் ஆகியோர், மரக்கன்றுகளை நட்டனர்.நீதிபதிகளின் பேச்சு வருமாறு:நீதிபதி சுரேஷ்குமார்: வாய்ப்புள்ள இடத்தில் மரம் நட்டால், இன்னும் சில ஆண்டுகளில் எங்கும் இயற்கை வளத்தை காக்கலாம். மரங்களை நடுவதன் மூலம் பசுமை பரப்பு அதிகரிக்கும். அதன் மூலம் மழை அதிகம் பொழியும். மரம் நடுவது இறைவனுக்குச் செய்யும் பெரும் சேவை.தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி செல்லவும், தொழில் நிறுவனங்களுக்கும் மரங்கள் பொருளாதார ரீதியாக உதவியாக இருக்கும். மனிதன் செய்ய முடியாததை மரங்கள் செய்யும்.நீதிபதி சுந்தர்: தமிழகத்தில், 100 ஆண்டுக்கு முன் பெய்த மழையே இப்போதும் பெய்கிறது. நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று நீர்வளத்தை மேம்படுத்தலாம். பண்ணைக் குட்டை அமைத்தால் பலன் கிடைக்கும். முன்பு, 70 சதவீதம் வனமாகவும், 30 சதவீதம் விளைநிலமாகவும் இருந்தது. தற்பாது, 30 சதவீதம் வனமாகவும், 70 சதவீதம் விளைநிலமாகவும் மாறிவிட்டது.''இதே நிலை தொடர்ந்தால் பல இடங்கள் காணாமல் போகும். குட்டி தீவுகள் இருக்காது. இன்னும், 80 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகம் இருக்காது'' என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றைப் பாதுகாக்க, வனப்பரப்பை, 70 சதவீதமாக மாற்ற வேண்டும்.நீதிபதி கிருஷ்ண குமார்: காற்றும் தண்ணீரும் இறைவனால் கொடுக்கப்பட்டது. அன்று காற்றையும், தண்ணீரையும் காசுக்கு வாங்கினால் அசிங்கம். இன்று பாட்டில் தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம். இதற்கு நாமே காரணம். காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டோம். மணலை சுரண்டி விட்டோம்.இளைஞர்களால் நிறைய மாற்றம் வரவேண்டும். அது பெற்றோரையும் மாற்றும். சாதாரண மக்களை ஊக்குவிக்க வேண்டும். கிராமங்களுக்குச் செல்லுங்கள். மரம் நடுங்கள். மக்களும் போற்றுவர்.நீதிபதி பாரதிதாசன்: மரங்களை தெய்வமாக வணங்கும் பூமி நம்முடையது. மரங்கள் நட்டு காங்கயம், தாராபுரம் ஆகிய வறண்ட பூமியை வளமாக்க முயற்சிக்கும் துளிகள், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினரை பாராட்டுகிறேன்.நிகழ்ச்சியில் 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம், காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் மகேஷ், உதவி ஆணையர் முல்லை, ஆடிட்டர் ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X