ஒட்டன்சத்திரத்தில் தெருநாய்கள் தொல்லையால் நடமாட அச்சம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
ஒட்டன்சத்திரத்தில் தெருநாய்கள் தொல்லையால் நடமாட அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
01:09

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தெருக்களில் நடமாட அச்சமாக உள்ளது.



ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை 40 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. சில மாதங்களாக ஒட்டன்சத்திரம் பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தெருவிலும் ஒன்றிரண்டு நாய்களே தென்பட்ட நிலையில், தற்போது 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.



தெருவில் நடந்து செல்லும்போது மிகவும் கவனமுடன் செல்ல வேண்டியுள்ளது. வாகனங்களில் சென்றாலும் விரட்டுகின்றன. நாய்களுக்குள் சண்டை ஏற்பட்டாலும் அவ்வழியே செல்வோர் மீதும் பாய்கின்றன. கழிவுகளை கிளறி ரோட்டில் இழுத்துப் போடுகின்றன. தெருநாய்களை கட்டுக்குள் கொண்டுவர, அவற்றுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X