செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
01:12

வில்பட்டியில் பூமி பூஜை



கொடைக்கானல்: வில்பட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் தரைமட்ட தொட்டிக்கான பூமி பூஜை நடந்தது. ஊராட்சி பொறியாளர் தங்கவேல் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.



பட்டாசு வெடித்தவர் கைது



வடமதுரை: வெள்ளபொம்மன்பட்டியில் சமீபத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கைதாகி இருந்த ஒரு தரப்பை சேர்ந்த இருவர் ஜாமீனில் விடுதலையாகி ஊருக்கு வந்தனர். இதையடுத்து அங்குள்ள ஊர் மந்தையில் பிரகாஷ் 37, என்பவர் பட்டாசு வெடித்து கொண்டாடினார். பிரச்னையை தூண்டும் வகையில் பட்டாசு வெடித்ததாக பிரகாஷை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.



வாலிபர் கைது



கொடைக்கானல்: பள்ளங்கி கோம்பையை சேர்ந்தவர் கார்த்தி 21, கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. ரோந்து சென்ற போலீசார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.



விழிப்புணர்வு பிரசாரம்



பழநி: பஸ் ஸ்டாண்டில் கலால் துறை மற்றும் மதுவிலக்கு போலீஸ் சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் உயரமான பொய்க்கால் மூலம் நடந்து சென்று போதை மருந்துகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கப்பட்டது. துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தனர். தாசில்தார் பழனிச்சாமி, மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், சப் -இன்ஸ்பெக்டர் பஞ்சலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.



குளத்தில் ஆண் பிணம்



பழநி: சிறு நாயக்கன் குளத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. போலீசார் உடலை மீட்டனர். பல நாட்களுக்கு முன் குளத்தில் விழுந்தது போல் உடல் அழுகி இருந்தது. பழநி டவுன்போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் பலிஒட்டன்சத்திரம்: கொசவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் 39. இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் சென்றார். மூலச்சத்திரம் அருகே சென்ற போது திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு சென்ற கார், இருசக்கர வாகனத்தில் மோதியது. சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X