நஞ்சுண்டாபுரம் சாலையில் கும்மிருட்டு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
01:22

தெருவிளக்குகள் இல்லாததால் தினமும் வழிப்பறி

பெயர் பலகையை சரியா வைக்கணும்கவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர்.நகர், இரண்டாவது வீதியின் பெயர் பலகை சிதிலமடைந்து, சாக்கடை கால்வாயில் கவிழ்ந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.- கார்த்தி, எஸ்.கே.ஆர்.நகர்.

பள்ளி அருகே அசுத்தம்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகரில் உள்ள, அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், துாய்மை பணியாளர்கள் பணி மேற்கொள்ளாததால், குப்பை குவிந்துள்ளது.- விஜய், காமராஜ் நகர்.

நோ பார்க்கிங்கில் வாகனங்கள்ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு, ரத்தின விநாயகர் கோவில் எதிரில், நோ பார்க்கிங் பகுதியில், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.- நடராஜன், ஆர்.எஸ்.புரம்.

வெள்ளலுார் ரோட்டில் கும்மிருட்டுநஞ்சுண்டாபுரம் - வெள்ளலுார் செல்லும் ரோட்டில் பல குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இச்சாலையில், போக்குவரத்தும் அதிகம் உள்ளது. இங்கு தெருவிளக்கு வசதி இல்லாததால், கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன. இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.- மணி, வெள்ளலுார்.

குப்பை அள்ளுவதில்லைமாநகராட்சி, 56வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், காமராஜ் ரோடு, பாலசுப்ரமணியா மில் எதிர்புறம் உள்ள, கல்லுக்குழி ரோடு, முத்து நகரில், குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதன் அருகிலேயே குப்பை குவிக்கப்படுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சுந்தரேசன், முத்து நகர்.

திருவள்ளுவர் வீதியில் துர்நாற்றம்வெள்ளக்கிணர் பிரிவு, திருவள்ளுவர் வீதியில், சாலையோரம் குவிக்கப்படும் குப்பை, அள்ளப்படாமல் குவிந்துள்ளது. உணவு கழிவுகள், இறைச்சிக்கழிவுகளும் இதில் குவிந்துள்ளதால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.- ஞானசம்பத், கீச்சான் தோட்டம்.

காற்றில் பறக்குது குப்பைமேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார், ஜி.என்.மில் அருகே, சுப்ரமணியம்பாளையத்தில், வைக்கப்பட்டுள்ள இரு குப்பை தொட்டிகளும் நிரம்பி வழிகின்றன. இதன் அருகில் குவியும் குப்பை காற்றில் பறந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சேவியர், சுப்ரமணியம்பாளையம்.

சாலையை சீரமைக்கணும்மசக்காளிபாளையம் பிரதான சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையை, சீரமைக்க வேண்டும்.- கார்த்திக், மசக்காளிபாளையம்.

டி.வி.எஸ்.,நகர் ரோட்டில் அச்சம்கவுண்டம்பாளையம் - டி.வி.எஸ்., நகர் ரோடு, ராம் நகர் அருகில், சாலை சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மழை நேரங்களில் இதில் தேங்கும் நீரால், வாகன ஓட்டிகள் தவறி விழுகின்றனர். இச்சாலையை செப்பனிட வேண்டும்.- சுகுமார், ராம் நகர்.

மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 47வது வார்டுக்கு உட்பட்ட, கணபதிபுதுார், எட்டாவது வீதியில் உள்ள, மின் கம்பம்(எண்: 5) சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- சண்முகம், கணபதி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X