இனிப்புடன் மக்கள் தீபாவளி பர்ச்சேஸ்: 'தாம் தூம்' கொண்டாட்டம்! கடைவீதிகளில் வியாபாரம் உச்சகட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 அக்
2021
02:12
பதிவு செய்த நாள்
அக் 25,2021 01:25

கோவை:கொரோனா அச்சம் நீங்கியுள்ளதால், கோவை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளி, நகைக்கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் தீபாவளி விற்பனை சூடு பிடித்துள்ளது.தீபாவளி பண்டிகைக்கு, இன்னும் ஒன்பது நாட்களே உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் போனஸ் அறிவிக்கப்பட்டு விட்டது.


தனியார் நிறுவனங்களில் போனஸ் வினியோகம் நடந்து வருகிறது. எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலான வர்த்தகர்களும் பொருட்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளன. இதனால், கோவை கடைவீதிகளில் பொருட்கள் வாங்க வரும் கூட்டம் அதிகரித்துள்ளது.


ஞாயிற்றுக்கிழமை நாளான நேற்று ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட வணிக பகுதிகளில் வாகன போக்குவரத்தும், மக்கள் கூட்ட நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை நிறுவனங்கள், உணவகங்கள், சாலையோர கடைகள், மார்க்கெட்டுகள் என அனைத்து இடங்களிலும், மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது.


ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக, கொரோனா தொற்று பாதிப்பால் வியாபாரத்தை இழந்து நொடிந்து போயிருந்த வர்த்தகர்கள், சில வாரங்களாக அதிகரிக்கும் வியாபாரத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!கொரோனா தொற்று இரண்டாம் அலையால், அதிகம் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.


பொதுமக்களும் தாங்களாகவே முன் வந்து, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதன் பயனாக, மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்துள்ளது.அதற்கு தகுந்தபடி சில வாரங்களாகவே தொற்று பாதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அச்சம் நீங்கிய மக்கள், தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைகளுக்கு படையெடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
25-அக்-202110:35:30 IST Report Abuse
duruvasar தரமான இனிப்புக்கள் வாங்க 100 கோடி ரூபாயுக்கு மேல் வர்த்தக வருவாய் உள்ள சிறுகுறு வியாபாரிகள் கடையில் வாங்கி அவர்களின் வியாபாரம் உயர உதவுங்கள்.. கார்பரேட் நிறுவனங்களை புறக்கணியுங்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-அக்-202106:02:17 IST Report Abuse
Natarajan Ramanathan நூறு கோடி மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கிய பிரதமருக்கு நன்றி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X