இரண்டாம் தவணை தடுப்பூசி: உயர்த்த சுகாதாரத்துறை திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
01:35

கோவை:இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதார துறை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில், ஆறு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாலும், முதல் தவணை செலுத்துபவர்களை விட இரண்டாம் தவணை செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை, குறைவாக இருந்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை, சுகாதார துறை மேற்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த ஆறாவது மெகா தடுப்பூசி முகாமில், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்பட்டது.வரும் நாட்களிலும், இரண்டாம் தவணை செலுத்த வருபவர்களுக்கு, முன்னுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் வரை, முதல் தவணை செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருந்தது. இதுவரை, 26.95 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.ஒரு சிலர் மட்டுமே விடுபட்டுள்ளனர். தற்போது இரண்டாம் தவணை போட்டுக் கொள்பவர்கள் தாமாக முன் வருகின்றனர். கடந்த சில வாரங்களில் இம்மாற்றம் ஏற்பட்டுள்ளது.கோவையில் உள்ள, 38 லட்சம் மக்கள் தொகையில், 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X