இயற்கை சார்ந்த உணவு அவசியம்: கருத்தரங்கில் அறிவுரை | நீலகிரி செய்திகள் | Dinamalar
இயற்கை சார்ந்த உணவு அவசியம்: கருத்தரங்கில் அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
01:42

குன்னுார்:குன்னுார் கரிமொரா ஹட்டி சமுதாய கூடத்தில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் மற்றும் கருணா அறக்கட்டளை, ஆர்.கே., டிரஸ்ட் சார்பில், 'உணவும் சுற்றுச்சூழலும்' தலைப்பில் மகளிருக்கான கருத்தரங்கு நடந்தது.ஆர்.கே., 'டிரஸ்ட்'பயிற்சியாளர் உஷா வரவேற்றார். சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு பேசுகையில்,''நவீன உணவு பொருட்களில், கலக்கும் அதிக ரசாயன இடுபொருட்களால், பால் உட்பட சைவ, அசைவ உணவுகள் விஷ தன்மையாக மாறி வருகிறது. சைவ உணவில், காய்கறிகள் முறையாக கழுவும்போது, விஷ தன்மை நீக்கலாம். கால்நடைகளுக்கான தீவன உற்பத்தியால், மாசு அதிகரிக்கிறது; கால்நடை கழிவுகளில் உற்பத்தியாகும் மீத்தேன் வாயுவினால், உலக வெப்பமடைதல், காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. இயற்கை உணவுகளை உண்பதன் மூலம் உடல் நலம் பாதுகாக்கப்படும். மூளை வளர்ச்சி; தாய்பால் சுரப்பு அதிகரிக்கும். மாவட்டத்தில் அரிய வகைப் பழங்கள், பயர் வகைகள் சாகுபடி செய்து, உட்கொள்வது அவசியம்,'' என்றார்.கூடலுார் கல்வி மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட், மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் உட்பட பலர் பேசினர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X