கிழங்கு போண்டாவில் புழு உரிமையாளருக்கு அபராதம் | நீலகிரி செய்திகள் | Dinamalar
கிழங்கு போண்டாவில் புழு உரிமையாளருக்கு அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
01:45

பந்தலுார்:தேவாலா பஜாரின் மையப்பகுதியில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் தேவாலா டான்டீ பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் தனது மகனுடன் டீ குடிக்க வந்துள்ளார். அவருக்கு கொடுத்த போண்டாவில் புழு இருந்ததை பார்த்துள்ளார். உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்தார்.உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட பேக்கரியில் உணவுப்பொருள் மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. கடை உரிமையாளருக்கு,5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X