விதை பரிசோதனை நிலையத்தில் 110 தரமற்ற விதை மாதிரிகள் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
விதை பரிசோதனை நிலையத்தில் 110 தரமற்ற விதை மாதிரிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
02:41

திருவள்ளூர் ; திருவள்ளூர் விதை பரிசோதனை நிலையத்தில், 110 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக திருவள்ளூர் மூத்த வேளாண் அலுவலர் சுகுணா தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை:திருவள்ளூர் விதை சோதனை நிலையத்திற்கு, 2021 - 22ம் ஆண்டு இலக்காக, 2,710 விதை மாதிரிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. விதை சட்டம் 1996 மற்றும் விதை விதி 1968ன் படி இதுவரை 1,775 விதை மாதிரிகள் பெறப்பட்டு விதை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



இந்த ஆய்வில் முளைப்புத் திறன், புறத் துாய்மை, இனத் துாய்மை, ஈரப்பதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.முளைத்த நாற்றுகளை இயல்பான நாற்றுகள்,இயல்பற்ற நாற்றுகள்,கடின விதைகள், முளைக்கா விதைகள் மற்றும் இறந்த விதைகள் என, ஐந்து வகையாக பிரித்து முளைப்புத் திறன் கணக்கிடப்பட்டது.நடப்பாண்டில், 110 விதை மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே விவசாயிகள் விதையின் தரத்தை அறிந்து பயிர் செய்ய ஒரு விதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணம், 30 ரூபாய் செலுத்தி தெரிந்து கொள்ளலாம்.எனவே, விதைகள் பரிசோதனை செய்ய, திருவள்ளூர், பெரியகுப்பம், ஆயில்மில் பஸ் ஸ்டாப் அருகே, நெ.48, ஜே.என். சாலை, விதைப் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X