மீனவர்கள் வலையில் சிக்கிய 27 கிலோ மயில்கோலா மீன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
02:44

பழவேற்காடு : மீனவர்கள் துாண்டிலில் சிக்கிய, 27 கிலோ எடை கொண்ட மயில்கோலா மீன் வகையை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.



திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். பாறை, கொடுவா, வஞ்சிரம், சுறா உள்ளிட்ட பெரிய மீன்களை பிடிக்க துாண்டில்களை பயன்படுத்துகின்றனர்.நேற்று அதிகாலை மீனவர்கள், பைபர் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். ஜி.பி.ஆர்.எஸ்., கருவி மூலம், மீன்கள் அதிகம் உள்ள பகுதியை கண்டறிந்து, துாண்டில் வலைகளை வீசி மீன்களுக்காக காத்திருந்தனர்.பழவேற்காடு லைட் ஹவுஸ் நடுகுப்பம் மீனவர்கள், வலைவீசிவிட்டு சில மணி நேரம் கழித்து அவற்றை இழுக்கும்போது,



அதிக எடை கொண்ட, மயில்கோலா வகையைச் சேர்ந்த ஒன்று வலையில் சிக்கி இருந்ததை பார்த்தனர்.கரை திரும்பிய மீனவர்கள் அதை எடை போட்டதில், 5 அடி நீள மயில்கோலா, 27 கிலோ எடையுடன் இருந்தது.மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த மயில்கோலா மீனை, மீன் வாங்க வந்திருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்



.இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:வழக்கமாக மயில்கோலா மீன்கள் ஆழ்கடல் பகுதிகளில் தான் இருக்கும். விசைப் படகுகளில் சென்று மீன் பிடிப்பவர்களுக்குதான் இந்த வகை மீன் கிடைக்கும்.பழவேற்காடு பகுதியில் எப்போதாவது தான் இதுபோன்று ஒன்றிரண்டு மீன்கள் கிடைக்கும். இது தண்ணீரில் பாயும் தன்மை கொண்டது.அதிக விலைக்கு இந்த மீன்களை விற்க முடியாது. தற்போது கிடைத்த மீன் 1 கிலோ, 70 ரூபாய்க்கு தான் விற்பனையானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X