வடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
வடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
03:03

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்கக் கோரி, சம்பா நெல் நடவு செய்த வயலில் இறங்கி, விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் கிராம விவசாயிகளுக்கு, காரையூர் பெரிய ஏரி அருகே 200 ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் உள்ளன. இதில், காரையூர் பெரிய ஏரி நீர் பாசனம் மூலம் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். மழைக்காலம் மற்றும் ஏரியின் உபரிநீர் வெளியேறும் போது வயல்களையொட்டிய வடிகால் வாய்க்கால் மூலமாக மழைநீர் அருகிலுள்ள ஓடைக்கு செல்லும். ஆனால் ஓடைக்கு செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் சமீபத்தில் பெய்த கனமழையில் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகின. வடிகால் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித் துறையினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.



இதனால் ஆத்திரமடைந்த வெண்கரும்பூர் விவசாயிகள், நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் சம்பா நடவு வயலில் இறங்கி, வடிகால் வாய்க்கால் அமைத்து தர கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், 3:00 மணியளவில் அவர்களாகவே கலைந்து சென்றனர். விவசாயிகள் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் வடிகால் வாய்க்கால் அமைக்காவிட்டால் வெண்கரும்பூர் பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபடுவோம்' என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X