பருவமழை முன்னெச்சரிக்கை குப்பை தொட்டிகள் சீரமைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
04:07

அடையாறு : பருவமழைக்கு முன், அடையாறு மண்டலத்தில், துாய்மை பணிக்காக பயன்படுத்தும் குப்பை தொட்டி மற்றும் பேட்டரி வாகனங்கள் சீரமைக்கும் பணி, துரிதமாக நடக்கின்றது.



அடையாறு மண்டலத்தில் உள்ள, 13 வார்டுகளில், 2,020 தெருக்கள் உள்ளன. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் முதல், செயல்திறன் அளவீட்டு முறையில், குப்பை கையாளும் பணியை, உர்பசர்சுமித் நிறுவனம் செய்கிறது.தினமும், 530 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதற்காக, 2,226 குப்பை தொட்டிகள், 510 பேட்டரி வாகனங்கள், 24 காம்பெக்ட் லாரிகள் உள்ளன.



பொதுமக்களிடம் இருந்து, குப்பையை தரம் பிரித்து வாங்க, ஒரு பேட்டரி வாகனத்தில், 8 சிறிய தொட்டிகள் இருக்கும். தினமும், மூன்று 'சிப்ட்' முறையில் பணி நடக்கிறது.இதற்காக, 700 துாய்மை ஊழியர்கள் உள்ளனர். மரம், கட்டட கழிவுகளை அப்புறப்படுத்த, இரண்டு டிப்பர் லாரிகள், இரவில் பிரதான சாலைகளில் சேரும் மண், குப்பையை உறிஞ்சி சுத்தம் செய்ய, 6 நவீன லாரிகள் உள்ளன.குப்பை தொட்டியில் உள்ள சக்கரம் பழுதடைந்து,



குப்பையை லாரியில் ஏற்றுவதில் ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மழையில், தண்ணீர் தேங்காத இடத்தில் தொட்டியை நகர்த்தி வைக்கவும் முடியவில்லை.மேலும், மழையால் பேட்டரி வாகனங்கள் அடிக்கடி பழுதடைகிறது. தண்ணீர் தேங்கும் சில தெருக்களில், வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.பருவ மழை தீவிரம் அடைவதற்கு முன், பழுதடைந்த தொட்டிகள், வாகனங்கள் சீரமைப்பு பணி வேகமாக நடக்கிறது. இதன்மூலம், மழைக்காலத்தில் தோய்வில்லாமல் குப்பை சேகரிக்க முடியும் என, ஊழியர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X