760 தெருக்களால் விழிபிதுங்கிய அதிகாரிகள் | சென்னை செய்திகள் | Dinamalar
760 தெருக்களால் விழிபிதுங்கிய அதிகாரிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
04:31

வேளச்சேரி ; வேளச்சேரியில், ஊழியர்கள் பற்றாக்குறையால் 760 தெருக்கள் உடைய 177வது வார்டில், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.



அடையாறு மண்டலம் 177வது வார்டு, வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, பெரியார் நகர், அம்பேத்கர் நகர், அஷ்டலட்சுமி நகர், ஏ.ஜி.எஸ்., காலனி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியவை. இங்கு, 760 தெருக்கள் உள்ளன.மண்டலத்தில், அதிகம் தெருக்கள் கொண்ட வார்டாக உள்ளது. வேளச்சேரி ஏரியின் இரு திசைகளில் வார்டின் எல்லை அமைந்துள்ளதால், பரப்பளவும் பெரியது. சாலைகள் சேதம், சட்டவிரோதமாக சாலை துண்டிப்பு, கழிவுநீர் பிரச்னை, மழை நீர் வடிகால், கால்வாய் அடைப்பு, தெருக்கள் ஆக்கிரமிப்பு போன்ற புகார்கள்



இந்த வார்டில் அதிகம்.இந்த வார்டில் இருந்து, தினமும் மாநகராட்சி கமிஷனர், முதல்வர் தனிப்பிரிவு என, 20க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின்றன. இதுபோக, வார்டு பொறியாளர்கள், சுகாதார அதிகாரி, மின் வாரிய அதிகாரிகளிடம் நேரடியாக கூறும் புகார்களும் அதிகம்.ஆனால், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க போதிய ஊழியர்கள் இல்லாததால், வார்டு அதிகாரிகள் திணறுகின்றனர்.இது குறித்து, வார்டு அதிகாரிகள் கூறியதாவது:3



அடையாறு மண்டலத்தில், மற்ற வார்டுகளில் 350க்கும் குறைவான தெருக்கள் தான் உள்ளன. 159வது வார்டில், 14 தெருக்கள் மட்டுமே உள்ளன. ஆனால், 177வது வார்டில் 760 தெருக்கள் உள்ளன. அதற்கு ஏற்ப புகார்களும் அதிகம்.குடிநீர் கழிவு நீர் இணைப்புக்காக சட்டவிரோதமாக சாலை துண்டிப்பு, முறையாக பணம் செலுத்தாமல் தெருவிளக்கு கம்பங்களில் 'டிவி' கேபிள் கட்டுவது,



கழிவுநீர் கசிவு, கொசு பிரச்னை, வெள்ள பாதிப்பு போன்ற புகார்கள் அதிகம் பதிவாகும். பொறியியல் துறையில், எட்டு பேருக்கு, நான்கு ஊழியர்கள் தான் உள்ளனர்.கழிவுநீர் வெளியேற்ற போதிய ஊழியர்கள் இல்லை. இதனால், சேதமடைந்த சாலையை சீரமைப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற நடவடிக்கையில் தீவிரம் காட்ட முடியவில்லை. மாநகராட்சி உயர் அதிகாரிகள் தலையிட்டு, போதிய ஊழியர்கள் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X