வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
04:33

கடலுார் : வடகிழக்கு பருவமழையொட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் மூட்டை தயார் செய்யும் பணி நடக்கிறது.



கடலுார் மாவட்டம் மழை, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கிறது. வடகிழக்கு பருவ மழை நாளை முதல் துவங்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் துண்டிப்பு, சாலை உடைப்பு போன்றவற்றை சரி செய்ய நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்களில் மண் மூட்டைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.மாவட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 10 ஆயிரம் மண் மூட்டைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.




கடலுார் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மட்டும் நேற்று, செம்மண் கிராவலை கொண்டு 1,200 மூட்டை தயார் செய்யும் பணி நடந்தது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை யொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் மூட்டைகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. வழக்கமாக மணலை கொண்டு மூட்டைகள் தயார் செய்யப்படும். இம்முறை மணல் தட்டுப்பாடு காரணமாக செம்மண் கிராவலை கொண்டு மூட்டைகள் தயார் செய்யப்படுகின்றன. அனைத்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களிலும் சவுக்கு கம்புகள், ஜே.சி.பி., இயந்திரங்கள், மரம் அறுக்கும் மிஷின், கயிறு உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன, என்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X