பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடி துவக்கம் நவ. 3ம் தேதி வரை நடக்கிறது | செய்திகள் | Dinamalar
பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடி துவக்கம் நவ. 3ம் தேதி வரை நடக்கிறது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
05:16


புதுச்சேரி : புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடி மானிய விலையில் நேற்று துவங்கியது.புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில், கடந்த 1992ம் ஆண்டு முதல் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்பட்டு வருகிறது.



நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தப்படவில்லை.இந்தாண்டு தீபாவளி பண்டிகை சிறப்பு அங்காடியை நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது.புதுச்சேரியில், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், காரைக்காலில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகிய இரு இடங்களில் சிறப்பு அங்காடி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தட்டாஞ்சாவடியில், தீபாவளி சிறப்பு அங்காடி நேற்று துவங்கியது.கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், ஆறுமுகம் எம்.எல்.ஏ., அரசு செயலர் உதயக்குமார், பாப்ஸ்கோ இயக்குனர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சிறப்பங்காடியில் 9 வகையான மளிகை பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெய் ஆகியவை மானிய விலையில் விற்கப்படுகிறது.



அனைத்து வகை பட்டாசு களும் எம்.ஆர்.பி., விலையில் இருந்து 75 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட உள்ளது.ஒரு ரேஷன் கார்டுக்கு அதிகபட்சமாக சர்க்கரை 4 கிலோ, சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெய் 4 லிட்டர், நீட்டு மிளகாய் அரை கிலோ, ஏனைய மளிகை பொருட்கள் தலா 2 கிலோ வாங்கிக் கொள்ளலாம்.சிறப்பு அங்காடி, அடுத்த மாதம் 3ம் தேதி வரை, தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்படும்.காரைக்காலில் தீபாவளி சிறப்பங்காடி வரும் 27ம் தேதி துவங்கி, 3ம் தேதி வரை எட்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.மளிகை பொருட்கள் 4.50 கோடி ரூபாய்க்கும், பட்டாசுகள் 5.50 கோடி ரூபாய் என மொத்தம் 10 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X