எங்களை லேசாக மதிப்பிடாதீர்: 'மாஜி' முதல்வர் குமாரசாமி சவால்! | செய்திகள் | Dinamalar
எங்களை லேசாக மதிப்பிடாதீர்: 'மாஜி' முதல்வர் குமாரசாமி சவால்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
05:18

ஹாவேரி : ''இடைத்தேர்தலில் ஹனகல் ம.ஜ.த., வேட்பாளரை, குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை பா.ஜ., மற்றும் காங்கிரசார் அப்படி நினைத்தால், தேர்தல் முடிவு வெளியாகும் போது, நிராசையடைய நேரிடும்,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி சவால் விடுத்தார்.



ஹாவேரி ஹனகல்லில் அவர் நேற்று கூறியதாவது:தேசிய கட்சிகள் ஆர்ப்பாட்டமான பிரசாரம் நடத்துகின்றன. ஆனால் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து, அவர்களின் ஓட்டுக்கு மதிப்பு கொடுத்து, நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்.தொகுதியில் நேற்று நடந்த, ம.ஜ.த., பொது கூட்டத்தில் பெருமளவில் மக்கள் குவிந்தனர். பலரும் கடன் ரத்தான சீட்டுகளை, என்னிடம் கொண்டு வந்து காண்பித்தனர்.'உங்களால் கடன் சுமையிலிருந்து மீண்டோம்' என கூறி, மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த குடும்பங்களின் இருவர் அல்லது மூவர், எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால், 70 ஆயிரம் ஓட்டுகளாகும்.அவர்களின் ஆசி எங்களுக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது. நாங்களே வெற்றி பெறுவோம்.மக்கள் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அரசுகளை மக்கள் பார்த்துள்ளனர். மக்கள் எவ்வளவு கஷ்டத்தில் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதே போல, ம.ஜ.த., அரசு இருந்த போது, சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது பற்றி, மக்கள் சிந்திக்கின்றனர்.தேசிய கட்சியினர் பணம் கொண்டு வந்து கொடுக்கின்றனர். பணப்பை குறித்து நான் பேசவில்லை.அதிகாரம் கிடைக்க வேண்டுமானால், பைகளை எப்படி கொண்டு வர வேண்டும் என்பதில், அவர்களுக்கு நல்ல அனுபவம் உள்ளது. இதனால் அவர்கள் பணப்பை பற்றி பேசுகின்றனர்.எழுபத்தைந்து ஆண்டுகளாக முஸ்லிம்களை காங்கிரஸ், தன் ஓட்டு வங்கியாக பயன்படுத்தியது. இப்போதும் அதையே செய்கிறது.

முஸ்லிம்கள் ஓட்டு வங்கியல்ல. அவர்களும் நம்மை போன்று, மனிதர்கள் தான் என்பதை அக்கட்சி தலைவர்கள் உணர வேண்டும்.இடைத்தேர்தலில் ஹனகல் ம.ஜ.த., வேட்பாளரை, குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை பா.ஜ., மற்றும் காங்கிரசார் அப்படி நினைத்தால், தேர்தல் முடிவு வெளியாகும் போது, நிராசையடைய நேரிடும்,இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X