இரு பஸ்களுக்கு இடையே ஸ்கூட்டருடன் சிக்கிய தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
05:20


பாகூர் : ஸ்கூட்டரில் சென்ற தம்பதி, இரு பஸ்களுக்கு இடையில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் காலை தனியார் பஸ் ஒன்று, மடுகரை வழியாக விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.அதே சமயம், மடுகரையில் இருந்து ஒரு பஸ் புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இவ்விரு பஸ்களும், கல்மண்டபத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே எதிர் எதிரே கடந்தபோது, அவ்வழியாக ஸ்கூட்டரில் கைக்குழந்தையுடன் சென்ற தம்பதி மீது பஸ் லேசாக மோதியது.



இதில், அந்த தம்பதி ஸ்கூட்டருடன், இரு பஸ்களுக்கும் இடையில் சிக்கிக் கொண்டனர்.அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை, பஸ் பயணிகள் மீட்டனர். பஸ்சில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
30-அக்-202115:08:00 IST Report Abuse
N Annamalai இரு பேருந்து ஓட்டுனர்களுக்கு எங்கள் பாராட்டுகள் .முன்பு பஸ் லாரி வருவதை பார்த்து இரு சக்கர ம் வண்டி ஓட்டுனர்கள் ஓட்டுவார்கள் .இப்போது நேர் மாறாக உள்ளது .
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-அக்-202121:33:12 IST Report Abuse
DARMHAR நிதானம் இல்லாமல் அவசர அவசரமாக ஸ்கூட்டர் ஒட்டியவருக்கு குறைந்த பட்சம் ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
28-அக்-202120:29:48 IST Report Abuse
THINAKAREN KARAMANI பொண்டாட்டி பிள்ளையோடு நாம் வண்டியில் செல்கிறோம் என்றால் எவ்வளவு அவசரமாக இருந்தாலும் நிதானமாகத்தான் வாகனத்தை ஓட்டவேண்டும். ஒரு வினாடியில் இந்த குடும்பத்துக்கு என்னஎன்னாவோ நடந்து முடிந்திருக்கும். ஏதோ உயிர் பிழைக்கும் அதிஷ்டம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. இனி அவரும் இந்த விடீயோவைப் பார்த்தோர்களும் நிதானம் தவறாமல் அவசரத்துக்கு இடம் கொடாமல் பயணிக்க வேண்டும். உயிரின் பாதுகாப்பு மிக முக்கியம் அல்லவா? THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X