இரு பஸ்களுக்கு இடையே ஸ்கூட்டருடன் சிக்கிய தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் | செய்திகள் | Dinamalar
இரு பஸ்களுக்கு இடையே ஸ்கூட்டருடன் சிக்கிய தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
05:20


பாகூர் : ஸ்கூட்டரில் சென்ற தம்பதி, இரு பஸ்களுக்கு இடையில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் காலை தனியார் பஸ் ஒன்று, மடுகரை வழியாக விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.அதே சமயம், மடுகரையில் இருந்து ஒரு பஸ் புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இவ்விரு பஸ்களும், கல்மண்டபத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே எதிர் எதிரே கடந்தபோது, அவ்வழியாக ஸ்கூட்டரில் கைக்குழந்தையுடன் சென்ற தம்பதி மீது பஸ் லேசாக மோதியது.



இதில், அந்த தம்பதி ஸ்கூட்டருடன், இரு பஸ்களுக்கும் இடையில் சிக்கிக் கொண்டனர்.அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை, பஸ் பயணிகள் மீட்டனர். பஸ்சில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X