23 மீனவர்களை மீட்க வலியுறுத்தல் | செய்திகள் | Dinamalar
23 மீனவர்களை மீட்க வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
05:26

புதுச்சேரி : இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தினார்.



தேசிய மீனவர் பேரவை தலைவரும் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., வுமான இளங்கோ, டில்லியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர் புருஷோத்தம் ரூபலா, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோரையும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி களையும் சந்தித்துப் பேசினார்.பின்னர் இளங்கோ கூறியதாவது:கடந்த கடந்த 4 தினங்களுக்கு முன்பு நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள் வழிதவறிய போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



அவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சர்களை கேட்டுக் கொண்டேன். இரு நாட்டு மீனவர்கள் பிரச்னை சம்பந்தமாக உறுதியான இறுதி முடிவெடுக்கும் வகையில் 5வது கட்ட இறுதி பேச்சுவார்த்தைக்கு இரு நாட்டு அரசுகளும் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X