டாக்டர் உட்பட இருவர் கொரோனாவுக்கு பலி புதிதாக 61 பேருக்கு தொற்று | செய்திகள் | Dinamalar
டாக்டர் உட்பட இருவர் கொரோனாவுக்கு பலி புதிதாக 61 பேருக்கு தொற்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
05:28


புதுச்சேரி : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற டாக்டர் உட்பட2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். புதிதாக 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.



புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,455 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில், 61 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,27,735 ஆக உயர்ந்துள்ளது. 88 பேர் மருத்துவமனையிலும், 379 பேர் லேசான அறிகுறியுடன் வீடுகளிலும் சிகிச்சையில் உள்ளனர்.தொற்றால் பாதிக்கப்பட்ட லாஸ்பேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற 72 வயது அரசு டாக்டர்ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.



கோரிமேடு மார்புநோய்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த 47 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்காரணமாக மொத்த உயிரிழப்பு 1,857 ஆக உயர்ந்தது.மாநிலம் முழுதும் நேற்று 4102 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை 7,17,902 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3,82,414 பேருக்கு 2ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X