சட்டம்-ஒழுங்கை சீர் குலைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தல் | செய்திகள் | Dinamalar
சட்டம்-ஒழுங்கை சீர் குலைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
05:29


புதுச்சேரி : ''சட்டம் ஒழுங்கை சீர் குலைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்'' என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.



அவரது அறிக்கை:உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை பகுதியில், வெடிகுண்டு வீசி, ரவி, அந்தோணி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கடந்த காலங்களில் வாணரப்பேட்டையை வெடிகுண்டு தயாரிக்கும் இடமாக மாற்றி வைத்திருந்ததன் விளைவாக, தற்போது மேலும் இரண்டு உயிர்கள் பலியாகி உள்ளன.

இதற்கு முன்பும் இப்பகுதியில் வெடிகுண்டு கலாசாரத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். வெடிகுண்டு தயாரிக்கும் இடமாக வாணரப்பேட்டை மாற்றப்பட்டதற்கு அரசியல் காரணங்களும் இருந்துள்ளன. இதையெல்லாம் போலீஸ் துறையினர் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று சட்டம் ஒழுங்கிற்கு சவால் ஏற்பட்டு இருக்காது .வாணரப்பேட்டை பகுதியில் போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல காலமாக கேட்டு வருகிறார்கள்.

அதை இப்போதாவது உடனடியாக செய்து, மக்களை அச்சத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். கொலையாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும்.சில வாரங்களாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் அளவிற்கு கொலைகள் நடந்து வருகின்றன.

இது, பா.ஜ.,-என் ஆர்.காங்., அரசுக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து, சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.உப்பளம் தொகுதியில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X