கிளீன் கடலூர் சார்பில் தூய்மை பணி டாக்டர் பிரவின் அய்யப்பன் துவக்கம் | செய்திகள் | Dinamalar
கிளீன் கடலூர் சார்பில் தூய்மை பணி டாக்டர் பிரவின் அய்யப்பன் துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
05:37

கடலுார் : ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி டிவைன் சிட்டி மற்றும் கிளீன் கடலுார் சார்பில் புதுப்பாளையம் நகராட்சிப் பள்ளியில் துாய்மை பணி நடந்தது.



டாக்டர் பிரவின் அய்யப்பன் தலைமை தாங்கி துாய்மை பணியை துவக்கி வைத்து கூறுகையில், 'கிளீன் கடலுார் சார்பில் இதுவரை 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் துாய்மை பணி நடத்தி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது' என்றார்.



சுரேந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் வினோத் முன்னிலை வகித்தார். விழாவில் நகராட்சி நல அதிகாரி அரவிந்த் ஜோதி, கூட்டுறவு சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், சித்ராலயா ரவிச்சந்திரன், தமிழ், சன் பிரைட் பிரகாஷ், அரிமா ராஜா, வக்கீல் வினோத், நிலா ஓட்டல் தங்கராசு, ராஜேஷ் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X