கொலை வழக்கு குற்றவாளி 11 ஆண்டுக்கு பின் சிக்கினார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
06:02


சங்கராபுரம் : கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையத்தைச் சேர்ந்தவர்



3அர்ஜூனன். இவரது மகள் விஜயலட்சுமி. இவருக்கும் சின்னசேலத்தைச் சேர்ந்த பட்டு மகன் ஏழுமலைக்கும் கடந்த 11 ஆண்டுக்கு முன் திருமணம் ஆனது. பின், ஏழுமலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார். அவரது மனைவி விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து மூரார்பாளையத்தில் வசித்து வந்தார்.



சிறையிலிருந்து வெளியே வந்த ஏழுமலை தனது தந்தை பட்டு, தாய் சிவமலை மற்றும் உறவினர்களுடன், கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மூரார்பாளையத்தில் உள்ள மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக சென்றார். அப்போது இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த ஏழுமலையின் தாய் சிவமலை இறந்தார்.இதுதொடர்பாக, சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, அர்ஜூனன், இவரது மனைவி அஞ்சலை, மகன் மணிகண்டன், முருகேசன் மகன் பலராமன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.



தலைமறைவான பெரியசாமி மகன் சின்னதுரை, 47; என்பவரை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், மூரார்பாளையத்தில் நடந்த விசேஷத்திற்கு வந்த சின்னதுரையை, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். 11 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளியை கைது செய்த சங்கராபுரம் போலீசாரை எஸ்.பி., ஜியாவுல் ஹக் பாராட்டினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X