வள்ளலார் அருள் மாளிகையில் போர்வை வழங்கும் நிகழ்ச்சி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
வள்ளலார் அருள் மாளிகையில் போர்வை வழங்கும் நிகழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2021
06:29

விழுப்புரம் : விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில், 500 பேருக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.



விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில், வடலுார், மேட்டுக்குப்பம் சித்தி வளாக மாளிகையில், சுத்த சன்மார்க்க நீதிக்கொடி கட்டிக்கொண்ட 148வது ஆண்டையொட்டி, கொடிநாள் விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் அருள்மாளிகையைச் சேர்ந்த சிவக்குமார், கவுசல்யாபாரதி, கருணாகரன், கிருபாகரன், பிரேம்ராஜன், ராஜேந்திரன், மணிமேகலை, வாசுதேவன் ஆகியோர் அகவல் பாராயணம் நிகழ்த்தினர்.



9:00 மணிக்கு சுத்த சன்மார்க்க நீதிக்கொடியை யோகா பயிற்சியாளர் சச்சிதானந்தம் கட்டினார்.11:00 மணியளவில் அருள்மாளிகை டிரஸ்டி பலராமன் தலைமையில், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 500 பேருக்கு போர்வையை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அப்ரைசர் சிவக்குமார் வழங்கி துவக்கி வைத்தார்.



மேலும், 500 பேருக்கு அன்னதானத்தை கொட்டியாம்பூண்டி கலியபெருமாள், திருக்கனுார் சந்திரசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை மேனேஜிங் டிரஸ்டி ஜெயஅண்ணாமலை, நிர்வாகிகள் பலராமன், ராமலிங்கம், சரவணபவன், பாரதி, அழகானந்தம், சக்திவேல், பன்னீர்செல்வம், வேல்முருகன் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X