பாரம்பரியமிக்க சென்டெக்ஸை சீர்குலைக்க முயற்சி: சங்க உறுப்பினர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
09:27

சென்னிமலை: பாரம்பரியமிக்க சென்னிமலை சென்டெக்ஸ் பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கத்தை, சீர்குலைக்க முயற்சி நடப்பதாக, உறுப்பினர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டால், பரபரப்பு எழுந்துள்ளது.


நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, சென்னிமலையில் சென்டெக்ஸ் பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கம் உருவானது. இதற்கான பெருமைக்கு உரியவர் எம்.பி.நாச்சிமுத்து. இவர் உருவாக்கியதுதான் கோ-ஆப்டெக்ஸ், கூட்டுறவு நூற்பாலைகள். வாழ்நாள் முழுதும் கைத்தறி நெசவாளர்களுக்காக வாழ்ந்து மறைந்தார். இவர் மறைவுக்கு பின், இவரின் மூத்த மகன் ஜெகநாதன், சென்டெக்ஸ் கூட்டுறவு சங்க தலைவரானார். இவர் மறைவுக்கு பிறகு, இரண்டாவது மகன் ஆறுமுகம் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சென்டெக்ஸ் பொதுக்குழு கூட்டத்தில், ஒரு சுயநல கும்பல் தரக்குறைவாக பேசி பதவி விலக வைத்தனர். இந்த மன உளைச்சலில் சில நாட்களில் இறந்தார். இந்நிலையில் நாச்சிமுத்து மூன்றாவது மகன் பாலசுந்தரம், அமெரிக்காவில் குடியேறினார். அந்நாட்டு குடியுரிமை பெற்று, தற்போது அங்குதான் வசித்து வருகிறார். இதனால் சங்க தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த பழனியப்பன் ஐந்து ஆண்டுகள் இருந்தார். இவரை தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டாக பொறையன்காடு பாலு தலைவராக உள்ளார். சங்கமும் நஷ்டத்தில் இருந்து, லாப கணக்கை தொடங்கியுள்ளது. தற்போதைய குழுவுக்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் உள்ளது. ஆட்சி மாற்றம் நடந்துள்ளதால், சங்கத்துக்கு விரைவில் தேர்தல் வரும் என ஒரு சிலர், கணக்கு போட்டு வருகின்றனர். அத்துடன் அமெரிக்காவில் உள்ள பாலசுந்தரத்தை, சங்கத்தில் உறுப்பினராக்கும் முயற்சி நடக்கிறது என்று உறுப்பினர்கள் மத்தியில் பரபரப்பு பேச்சு எழுந்துள்ளது. இதே கும்பல்தான் ஆறுமுகத்தை அவமானப்படுத்தியது என்றும் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். கைத்தறி செயல்பாடுகள் குறித்தும், உள்ளூர் அரசியல் குறித்தும் தெரியாதவரை, சங்க உறுப்பினராக்கி, தேர்தலில் அவரை தலைவராக்கி, தங்கள் முறைகேடுகளுக்கு அவரை பகடைக்காயாக திட்டமிட்டு களமிறங்கியுள்ளனர். அவரை உறுப்பினராக தேர்வு செய்யாவிட்டால், பொதுக்குழுவை நடத்த விட மாட்டோம் என்றும், தற்போதைய நிர்வாக குழுவுக்கு மிரட்டல் விடுத்து வருவதாக, சங்க உறுப்பினர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. மொத்தத்தில் மோசடி கும்பலின் சுயநலத்துக்கு, எம்.பி.என்., பெயரை பயன்படுத்தி, லாபத்தில் இயங்கும் சென்டெக்ஸ் பிரதம கைத்தறி சங்கத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.


சீர்குலைப்பு முயற்சி குறித்து சங்கத்தின் மூத்த உறுப்பினரான கோபால சாமி (எண்:1273), கூறியதாவது: தற்போது சங்கத்தில், 609 உறுப்பினர்கள் உள்ளோம். லாபத்தில் நல்ல முறையில், சங்கம் இயங்கி வருகிறது. இதில், 12 உறுப்பினர்கள், தங்களின் சுயநலத்துக்காக எம்.பி.என்., வாரிசை உறுப்பினராக்க போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். நிறுவனத்தின் பெருமையை காக்க நாங்களும் முடிந்தவரை போராடி பார்க்கிறோம். மோசடி கும்பலின் நாச செயலுக்கு, கைத்தறி துறை உயர் அதிகாரிகள், எந்த விதத்திலும் உதவி செய்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X