வரட்டாறு நிரம்பி கரைபுரளும் வெள்ளம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2021
09:35

சேலம்: சேலம் மாவட்டத்தில் பரவலாக அடிக்கடி மழை பெய்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் ஏற்காட்டில், 100 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி, 37, பெத்தநாயக்கன்பாளையம், 36, இடைப்பாடி, 22, மேட்டூர், 18.4, ஓமலூர், 18, காடையாம்பட்டி, 4, சேலம், 1.6, ஆத்தூர், 1 மி.மீ., என மழை பதிவாகியுள்ளது. கடந்த, 1 முதல், 23 வரை, சேலம் மாவட்டத்தில் பதிவான மழையளவு, 161.3 மி.மீ., இயல்பான மழை அளவு, 135.8 மி.மீ., இத்துடன் ஒப்பிடுகையில், 19 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதனால், நீர் நிலைகள் நிரம்பும் நேரத்தில், தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியாமல், தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் பெய்த கனமழையால், அதன் அடிவாரத்தில் உள்ள ஏ.டி.சி., நகர், வரட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு, அதன் தரைப்பாலத்தை மூழ்கியபடி ஆர்ப்பரித்து செல்கிறது. அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறியபடி ஊர்ந்து செல்கின்றனர். அதேபோல், ஏற்காட்டில் பெய்து வரும் மழையால், சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. இதனால், தாரமங்கலம், கே.ஆர்.தோப்பூர், அணைமேட்டில், நேற்று ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.


இடிந்து விழுந்த சுவர்: தேவூர், அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால், இடைப்பாடியிலிருந்து கல்வடங்கம் செல்லும் சாலையில் உள்ள தண்ணீர்தாசனூர், நால் ரோடு பகுதிகளில், சாலையோரம் தாழ்வான பகுதியில் உள்ள கடைகள், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் செட்டிப்பட்டி, சென்றாயனூர், புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட இடங்களில், விவசாய பயிர்களை மழைநீர் மூழ்கடித்துள்ளது. அரசிராமணி, தேவூர் பகுதி சரபங்கா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றை ஒட்டியுள்ள விவசாய வயல்களில் தண்ணீர் புகுந்தது. தேவூர், அம்மாபாளையத்தில் முத்துபையன் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.


சுற்றுலா பயணியருக்கு தற்காலிக தடை: ஆத்தூர் அருகே முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறை, 'சூழல் சுற்றுலா திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருவதால், பல பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சில நாளாக, கல்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால், ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் வருகிறது. நேற்று, அங்கு, 915 பேர் வந்தனர். மதியம், 3:00 மணிக்கு ஆணைவாரி நீர் வீழ்ச்சியில், செந்நிறத்தில் அதிகளவில் தண்ணீர் வரத்தொடங்கியது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணியர் வெளியேற்றப்பட்டனர். பின், ஆணைவாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரி சூழல் பூங்காவுக்கு சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X